பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

129

நல்ல தோழி! நீ வாழி! தோழி. தான் கொண்ட குளினைப் பாதுகாவாமல் பொய்த் தவனின் மலையா யிருந்தும் அது வீழ்ந்து விளங்கும் அருவியை உடையது; மழை பெய்தலால் விளங்கும் அருவியையுடையது இது என்ன வியப்பு!

அதைக் கேட்ட தலைவி தான் கூறிய சூளைப் பொய்யாக்குதற்கு உரியனோ! பொய்யாக்குதற்கு உரியனோ! அல்லன். ஆதலால் நீ அஞ்ச வேண்டா என்று கூறிய மகளிரைப் பாதுகாவாமல் விடுவதற்கு உரியவனோ! மலை மிக்க நல்ல நாட்டை உடையவன் கூறிய மெய்யிலே, பொய் தோன்றுமாயின் அது நிலவினில் தீயானது தோன்றியதைப் போன்றதாகும்!

எனது முன்கையில் வளையல் கழலும்படியாய் என்னிடம் வாராதவனின் மலையாயிருந்தும் இளமுகில் உலவும் அது ஒரு காலத்தில் அன்றி நாள்தோறும் உலவுகின்றது - இது தலைவி கூறியது.

பின் தோழி கூறுகின்றாள்: நின்னிடம் தலைவன் வாராது ஆற்றியிருப்பானோ! வாராது ஆற்றியிருப்பானோ! அதுவன்றி இம் மலை நாடனின் அருளில் இத்தகைய கொடியவை தோன்றுமாயின் நிழலையுடைய குளத்துள் நீரில் நின் குவளை வெந்தது போன்ற இயல்பையுடையது. ஆதலால் நீ அங்ஙனம் கூறாதே!

அதைக் கேட்ட தலைவி சொல்லலானாள். என் மேனியைக் கூடாது துறந்தவனின் மலையாயிருந்தும் அது நீலமணி போல் விளங்கும் கழுவப்படாத நீலமணிபோல்

தோழியே! நீ கூறியபடி தலைவன் நம்மைக் கைவிடுவான் அல்லன் ஒன்றுடன் ஒன்று தொடர்ந்த மலையையுடைய அவன் நம்மைக் கைவிடுவான் அல்லன் அவனுடன் நாம் கொண்ட உறவில் இத்தகைய கொடியவை தோன்றுமானால் அது வானில் உலவும் ஞாயிற்றுள் இருள் உண்டான தன்மை உடையது ஆதலால் நீ அவ்வாறு கூறாதே என்று தோழி சொன்னாள்.

தோழி நம் வள்ளைப்பாட்டால் நாம் இக் கருத்துப் பொதியப் பாட, நம் மென் தோளுக்கு உரிமை உடையவனும்