பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

13

380. இரவுக்குறி வரின் வாழாள் தலைவி

யாயே, கண்ணினும் சுடுங் காதலளே;
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; சீறடி சிவப்ப
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
நல் வரை நாட! நீ வரின்
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

- கபிலர் அக 12

“தினைப்புனம் காக்கும் அழகிய மகளிர் ஓயாமல் ஆர வாரிக்கும் தோறும் கிளிகள் தம் இனம் என எண்ணிப் பல காலும் அழைப்பதற்கு இடமாய் அமைந்தது. குறவர் அணில் கள் ஆடும் பெரிய கிளையையும், சிறந்த காய்களையுமுடைய பலா மரத்தின் இனிய கனியான பயனைக் கொள்வதற்கு அமைத்த குடிசையின் கூரை மறையுமாறு வேங்கை மலர்கள் உதிர்ந்து பரவியுள்ளது. அத் தோற்றத்தைக் கண்டு புலி என்று எண்ணி அஞ்சியது. புள்ளிகளை யுடைய யானை அஞ்சியதால் முகில்கள் தங்கும் மலைச்சாரலில் மூங்கில்கள் முரிந்து விழும்படி ஓடுகின்றன. இத்தகைய வளம் வாய்ந்த மலை நாட்டையுடைய பெருமானே! கேள். எம் தாய் தன் கண்ணை விட இவளைப் பேரன்புடன் பாதுகாப்பவள். எம் தந்தையும் எம் தலைவியான இவளின் அடிகள் நிலத்தில் படுவதைப் பொறுக்காதவனாய், “ஏடி! நீ என்ன செய்தற்கு இவ்வாறு சிறிய அடிகள் சிவக்குமாறு திரிகின்றாய்' என்று உரைப்பான். இனி யாங்களோ ஒரு பொழுதும் பிரிதல் இல்லாது கூடிய வெறுத்தல் இல்லாத நட்பினால் இரண்டு தலைகளையுடைய ஒரு பறவையின் உடம்பில் உள்ள ஓர் உயிர் போல் உள்-