பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை-
தன் நசை உள்ளத்து நம் நகை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?

- வெறிபாடிய காமக் கண்ணியார் அக 22

தோழி! "தெய்வம் பொருந்தியுள்ள மலை உச்சியினின்று விழும் அருவிக்கூட்டம் விளங்கும் காடு பொருந்திய நாட்டை யுடைய நம் தலைவனின் நறுமணம் கமழும் அகன்ற மார்பு, வருத்திய வருத்தத்தை இதனால் ஏற்பட்டது என்று அறியாது கலக்கம் அடைந்த காலத்தில், தன்னை வணங்காத ‘சூரபன்மன்' முதலான பகைவரைக் கொன்று அழித்த பல்வகைப் புகழை உடைய பெரிய கைகளையுடைய முருகனை வழிபாடு செய்தால், இவள் துன்பம் தணியும் என்று அறிவு வாய்க்கப் பெற்ற பெண்டிர் 'இது தெய்வத்தால் உண்டான துன்பமே!' என்று மெய் போலக் கூறினர். கூறத், தலைவி, 'தோழியே நம் தலைவனைப் பழி கூறாதே; தெய்வத்தால் உண்டான குற்றம் என்று பெண்டிர் சொன்ன அன்றைய இரவே, நம்தாய் வேலனை அழைத்தாள்; அவன் வந்து முருகனுக்கு வழிபாடு நடத்தற்குரிய களத்தைத் தூய்மை செய்தான் அலங்கரித்தான் வேல் நட்டுக் கடப்ப மாலையைச் சூட்டினான்; நம் வளம் வாய்ந்த இல்லம் ஒலியுண்டாகப் பாடிப் பலியைத் தந்தான் செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி முருகனை வர வழைத்தான் அத்தகைய அச்சம் பொருந்திய அந்த நள்ளிரவில், நம் தலைவன் மார்பில் அணிந்த சந்தனம் நறுமணம் கமழப் பக்க மலையில் உள்ள அரிய குகைகளில் செறிந்த பல பூக்களை வண்டுகள் மொய்க்குமாறு ஆடியும், ஆண் யானையான இரையை அறிவதற்கு ஒதுங்கிய பார்வையுடன் மறைந்து இயங்கும் இயல்பு கொண்ட வலியுடைய ஆண் புலியைப் போல், நம் நல்ல இல்லங்களையுடைய நம்மூர்க் காவலர் தம்மை அறிந்து கொள்ளாத வகையில் தம்மை விரும்பும் நம் விருப்பம் நிறைவுற நம்மிடம் வந்தார். வந்து இனிய எனது உயிர் தளிர்க்கும்படித் தழுவும் போதெல்லாம்