பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை ' த. கோவேந்தன்

31

மில்லையாகுமாறு, வானில் இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமான பல முகில்கள் ஓயாமல் பெய்த மழையால் உண்டாகிய வெள்ளம் இடந்தோறும் மிகுகின்றது. அதனால் யானைக் கன்றின் காலை இழுத்துச் செல்லும் கடிய சுழியை உற்ற வெள்ளத்தில் மென்மையான தலையைப் பெற்ற இளைய பெண் யானைகளின் ஆரவாரங்கள் பலவுடன் வெண்ணிறக் கொம்புகளையுடைய ஆண் யானைகளும் ஆரவாரம் ஏற்படக் கன்றுகளைப் பற்றுதற்கு நீரைத் துழாவும் இடம் அகன்ற பரந்த பாம்புச் செடிகளை உடையது. இத்தகைய இயல்புடைய பகற்காலத்தில் இயங்குவதற்கும் மக்கள் அஞ்சும், நடுக்கம் தரும் கடிய நெறில் நம் தலைவர் வந்துள்ளார் அவரை நாம் எதிர்கொள்வோம்" எனத் தலைவன் இரவுக்குறி வந்த காலத்து தோழி தலைவிக்குக் கூறினாள்.

392. தவறுடையேன் யானே

இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளிபெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே, யாறே
கட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக