பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

43

என் ஆகுவள் கொல்தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர்குரல் எனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள்தான், நின் அளி இலது இலளே!

- கபிலர் அக 118

“ஒலிக்கும் வெண்மையான அருவிகள் விளங்கும் மலை யின் சாரலில், தேன் மணக்கும் கொத்துகளையுடைய வேங்கை மலர்களைச் சூடித், தொண்டகப் பறையின் தாளத் துக்கு எற்றபடி, ஆடவர் பெண்களுடன் கலந்து தெருக்களில் ஆடும் எம் சிறுகுடிப்பாக்கத்தில், எம் கண்காண வடிவம் கொண்டு வரும் முருகவேளைப் போன்ற அழகுடையவனே! வலிய நாய் பின்னே வர நீ பகற் போதில் வரின் இவ் ஊரவர் சொல்லும் அலர்க்கு அஞ்சுகிறோம் கொல்லும் புலிகள் இரை தேடித் திரியும் நிறைந்த இருளில் அவற்றுடன் பகைமை கொள்ள அஞ்சி, கரிய பெண் யானையுடனும் கன் றோடும் கூடிய பெரிய வாயையும் பெரிய கையையும் உடைய ஆண் யானை தான் அந்தப் புலி பிடித்துக் கொள்வதனின்று தப்பிப் பிடி முதலியவற்றை மறைத்து வைத்துக் கொள்ளும் அதற்குக் காரணமான நள்ளிரவில் நீ தனியாக வருவதை அதைக் காட்டிலும் அஞ்சுகிறோம் தலைவ! பல நாளும் புணரும் பகற்குறியாகக் கொண்ட முற்றிய கதிரையுடைய தினைப் புனத்தில் கிளியை ஒட்டுதற்குப் பாடும் பாடலும் நீங்கி இல் செறிக்கப்பட்டாள் இனி என் ஆவாளோ! இரங்கத்தக்க என் தோழி உன் அருளையேயன்றி வேறொரு துணையிலள் ஆயினாள், அதனால் தலைவியை விரைந்து மணக்க” என வேண்டினாள் தோழி


402. தித்தன் புறங்காட்டைப் போல களவு

இரும்பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகுஉடன் மடியின்,
வல் உரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்;
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்,
துஞ்சாக் கண்ண ர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்று