பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 67


அழகிய இடமுடைய வானத்தில் விளங்கிய கதிரவனின் ஒள்ளிய கதிர் அவன் உடலைக் காயாது பறவைகள் யாவும் ஒன்று கூடித் தம் இறகுகளால் பந்தலிட்டு நிழல் செய்து கொண்டித்தலை நான் காணேன் என்று அவன் இறந்து பட்ட இடத்தைக் காண்பதற்குச் செல்லாமல் சினம் மிகுந்து நன்னன் அருள் இல்லாது மறைந்து கொண்டான்; அங்ஙனமாக - மிக்க விரைவு கொண்டு வந்த பல வேளிர் மகளிர் மலர்களால் ஆன மாலையை அழித்துவிட்டு அழுகை ஆர வாரத்தைச் செய்தனர் அதனைப் பழியின்றிப் பகைவர் படையினை வெல்லும் பெரும் படையையுடைய அகுதை என்பவன் நீக்கினான் அதைப் போல்.

ஓரி என்ற வள்ளலின் பல பழங்களைக் கொண்ட பலா மரங்கள் பொருந்திய பயன்மிக்க கொல்லி மலையில் கார் காலத்தில் பூக்கும் மலர் போல், மணம் கமழும் அழகும் மென்மையும் உடைய கூந்தலையுற்ற மாமை நிறத் தலைவி உப்பால் இடப்பட்ட அணையினால் தடைப்பட்டு நில்லாத மழையால் உண்டான வெள்ளம் போல் நாணத்துள் அடங்காத காமத்துடன் வந்து நம் துன்பத்தை நீக்கினாள். அவள் வாழ்வாளாக!” என்று தலைவன் தன் உள்ளத்திற்கு உரைத்தான்

420. நெஞ்சே, நின் மார்பில் வேல் பாய்க

'

தாஇல் நன்பொன் தைஇய பாவை
விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன
மிகுகவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்
கிளைஅரில் நாணற் கிழங்குமணற்கு ஈன்ற
முளைஓரன்ன முள்ளயிற்றுத் துவர்வாய்
நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ்
இசைஓர்த் தன்ன இன்தீம் கிளவி
அணங்குசால் அரிவையை நசைஇ, பெருங்களிற்று
இனம்படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறல்அருங் குரையள் என்னாய் வைகலும்
இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே

என்னை இன்னற் படுத்தனை மின்னுவசிபு