பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

89


கடியுடை வியல்நகர் ஓம்பினள் உறையும்
யாய்அறிவுறுதல் அஞ்சிப் பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்
யான்நின் கொடுமை கூற, நினைவுஆங்கு
இணையல் வாழி,தோழி!நத் துறந்தவர்
நீடலர் ஆகி வருவர்,வல்லென
கங்குல் உயவுத் துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள்உவந் ததுவே!

- மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் அக 298

“உலகத்துக்குப் பயன் மிக்க பல செல்வங்களைத் தரும் ஞாயிறு, விளங்கும் தொழில்களை இந்த உலகத்துக்கு தருமாறு வலமாய் எழுந்து விளங்கிப் பெரிய கடலில் தோன்றி யதைப் போல், நீலமணி போன்று இருளையுடைய மாலைக் காலத்தில், நிறைவாக மலர்ந்துள்ள வேங்கை மரத்தின் ஒளி பொருந்திய தழைத்த தளிர்களையுடைய பெரிய கிளையில் உள்ள குளிர்ந்த துளிர்களை அசைந்து வரும் காற்று மெல்ல எனத் தடவி உதிர்க்கும் இவ் இயல்புடைய நாட்டை உடையவனே!

தன் பகையைக் கொன்று சினத்தைப் போக்கிக் கொள்ளாமலும், அல்லது வென்று ஒட்டி அதன் வலி மையை மெலிவிக்காமலும், பெரிய பெண் யானைகளின் கூட்டமாய் இனத்துடன் கலவாமலும், பெரிய மழை போன்ற மதத்தால் செருக்கை அடைந்து மலையில் பெரிய ஆண் யானை இயங்கும் பெரிய காட்டு வழி அரிய இருள் நீங்க வெண்மையான வேலைக் கையில் கொண்டு மென்மையான அரும்பு மலர்ந்த தாழ்ந்த மலர் மாலையில் மொய்க்கும் வண்டுகளை ஒட்டிப் பாதி நாளான இரவில் நீ இங்கு வருகின்றாய் இவ்வாறு வரும் நின் வருகையை விட - மழை போன்ற கள்ளையும், விரையும் தேரையும் உடைய எம் தந்தையின் காவல் பொருந்திய பெரிய மனையில் எம் தாய் எம்மைப் பாதுகாத்திருப்பாள்; அவளது காவல் அகலாதி ருக்கும் நள்ளிரவில் அவள் அறிந்திடற்கு அஞ்சி, எம் காம நோயை வெளிப்படுத்தாது மெல்ல நீ வரவில்லை என்ற கொடுமையைச் சொல்ல எண்ணியவுடனே தோழி அதைக்