பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

  • * * * - - - * * * * * * * * * * * * -مسمسمسمحتخت هيبسي لإجتتسم مسمسم . . . . . . . . . . . . . . . . . . நெய்தல்

"Sły

இஇ9

தாய்க்கு-உரைத்தல் 1. கணவன் தேர் வந்தது அன்னை, வாழி! வேண்டு அன்னை உதுக் காண் - ஏர் கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் பூப் போல் உண்கண் மரீஇய நோய்க்கு மருந்து ஆகிய கொண்கள் தேரே.

- அம்மூவனார் ஐங்குறு நூறு 101 தோழி. செவிலியை நோக்கி, “தாயே! யான் கூறும் இதனை விரும்பிக் கேட்பாயாக நின் மகளின் நீலநிறம் வாய்ந்த மலரைப் போன்ற மை பூசப்பெற்ற கண்ணில் பரவிய பசலை நோயானது அகல்வதற்குரிய மருந்தான் தலைவனின் பெரிய தேர் நீண்ட கொடிகளையுடைய பசுமையான அடம்பங் கொடி சிதையும்படி நெய்தல் நிலப்பகுதியைச் சிதைத்துக் கொண்டு வருகிறது. அதை அங்குப் பார்ப்பாயாக!” என்று சுட்டிக் காட்டினாள்.

2. தேர்மணி ஒலி ஒலிக்கின்றது அன்னை, வாழி! வேண்டு அன்னை நம் ஊர் நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது, இன்புற இசைக்குமவர் தேர் மணிக் குரலே. - ஜங் 102 தோழி, செவிலித் தாயைப் பார்த்து, “தாயே! நான் கூறும் இதை விரும்பிக் கேட்பாய். நம்மூரில் நீல நிறம்