பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் ஐ.

புலம்ப வந்து இறுத்த புன்கண் மாலை, இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர, மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்பக், கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து, இன்று நீ இவணை ஆகி, எம்மொடு தங்கின் எவனோதெய்ய? செங் கோல் கொடு முடி அவ் வலை பரியப் போகிய கோட் சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலரே.

- மதுரைச் சுள்ளம்போதனார் நற் 215 "கீழைக்கடல் எழுந்து, நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பி, பகல்கெழு செல்வன் என்னும் ஞாயிறு மேல் மலையில் மறையத் தனிமை வந்து தங்கிய துன்பம் தரும் மாலைக் காலத்தில், இலங்கிய வளையல்களை அணிந்த மகளிர் தத்தம் இல்லங்களிலே அணிசெய்ய மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய நெய்யை ஊற்றி விளக் கேற்றுவர். நீலநிற முடைய பரப்பில் விளங்கும் அலைகள் மோதும், கரையிலிருக்கும் “கல்” என்னும் ஒலியுள்ள பாக்கத்து இன்று நீர் இவ் இடத்துள்ளவராகி எம்மோடு தங்கி யிருந்தால் என்ன? சிவந்த காம்புகளையும் வளைந்த முடி களையுமுடைய அழகிய வலை அறும்படியாகப் போகிய கொல்லும் தன்மையுள்ள சுறா மீன்கள் குறித்து மிக்க் வலிமையோடு வேட்டைக்குப் போன எம் சுற்றத்தார் வெற்றி பெறாது திரும்பி வரமாட்டார்” என்று பகற்குறி இடத்திற்கு வந்து மீளும் தலைவனிடம் தோழி சொன்னாள்

222. தனியளாய் இன்னும் இருப்பதா?

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; வாவலும் வயின்தோறும் பறக்கும்; சேவலும் நகை வாய்க் கொளிஇ நகுதொறும் விளிக்கும்; ஆயாக் காதலொடு அதர்ப்படத் தெளிந்தோர் கூறிய பருவம் கழிந்தன்று பாரிய