பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

131


உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,

பெரும் போது அவிழ்ந்த கருந் தாள் புன்னைக்

கானல் அம் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்காமாறே. - இளநாகனார் நற் 231

"தோழி, கரிய அடி மரத்தையுடைய புன்னையின் பெரிய அரும்பு, வீட்டிலேயுள்ள ஊர்க்குருவியின் முட்டை உடைந்தது போல மலர்ந்தது. அவ்வாறாய சோலையில் நெய்தல் நிலத் தலைவன் முன்பு தந்த காதல் நம்மை விட்டு நீங்காமலுள்ளது. மாசற விளங்கிய நீலமணி போன்ற நிறத்தை யுடைய, விசும்பிலிருக்கும், கைதொழும் தகுதியுள்ள எழு மீன் போலப் பெரிய கடற்பரப்பிலே கரிய முதுகு நனையும்படி சிறிய, வெள்ளை நிறமான நீர்க் காக்கைகள் பலவும் நீராடும் கடற்துறை நமக்கு வருத்தம் தருவதாய் உள்ளது. ஏனென்றால் அக் கடல் துறையில்தான்் கொண்கன் பண்டு காதல் தந்தான்்” என்று தலைவன் ஒருபுறமாக இருந்தபோது விரைவில் தலைவியை மணக்கத் தோழி கூறினாள்.

227. திருமணத்திற்குத் திரும்புகிறான் உரவுத் திரை பொருத பிணர்படு தடவு முதல், அரவு வாள் வாய முள் இலைத் தாழை பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும், குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, கண்டனம் வருகம் சென்மோ - தோழி, - தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, படு மணிக் கலிமாக் கடைஇ, நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉமாறே. - ஆசிரியர் ? நற். 235 "தோழி! தாழை வலிய அலை மோதும் இடத்தில் இருப்பது. சொரசொரப்புள்ள வளைந்த அடிப்பாகத்தை யுடையது. அராவும் வாளரம் போன்ற வாயையுடையது. முள்ளுள்ள இலைகளைக் கொண்டது. அத் தாழை பொன் போன்ற பூந்தாதையுடைய புன்னை மலரொடு சேர்ந்து கம்.ழும் அவ்வாறாயதும் பல பூக்களை உடையதுமான