பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


புணர் துணையைக் கூப்பிடக் கூவுதலை நிறுத்தவில்லையே” என்று தலைவி, ஆற்றியிருக்கக் கோரிய தோழிக்கு எதிர் உரைத்தாள். §

254. சிறந்த நட்பு நன்மை செய்யும் கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, உறு கால் தூக்கத், தூங்கி ஆம்பல், சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, வெளிய விரியும் துறைவl என்றும், அளிய பெரிய கேண்மை நும்போல், சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் தேறா நெஞ்சம் கையறுபு வாட, நீடின்று விரும்பார் ஆயின், வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே

- நம்பி குட்டுவனார் நற் 345 "கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று உதிரும் பசிய காய் நீல நிறமான பெரிய கழியின் அடித்தளம் வரை போகும்படி வீழ்ந்தது. வீசும் காற்றுத் துரக்க உயர்ந்த ஆம்பல் அரும்பு, சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டது போல் மலர்ந்தது. அப்படிப்பட்ட துறைவ, எப்போதும் இரக்கமுள்ள சிறந்த நட்பு நன்மை செய்யும், உம் போன்ற நற்பண்புகளை எதிர் ஏற்றுக் கொண்ட செம்மையாளர்களும் தெளிவற்ற நெஞ்சம் உடைய எம் போன்றோர் கையற்று வாட்டமடைய நீண்ட நாள் விரும்பா மல் இருந்தார்களானால் வாழ்வது எப்படி? நீ நயந்து தெளிவிக்கும் தெளிவு தேய்ந்து போகட்டும்" என்று தலை வன் தலைவியை ஆற்றுவித்தபோது தோழி குறுக்கிட்டு மொழிந்தாள். *

255. போராடும் நெஞ்சம்!

நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, பால் மலி கடலின், பரந்து பட்டன்றே: