பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தலைவி தன் தோழியை நோக்கி, “தோழியே கேட்பாயாக, வெண்மையான மணல் பொருந்திய கரையை அலைக்கும் உயர்ந்த அலைகளையுடைய துறைவனுக்குப் பெண்டா யினாள் என்று என்னை இவ் ஊரினர் நேற்றுப் பழி கூறினர். அதைக் கேட்டாள் அன்னை. சினம் கொண்டாள். அன்னாய் என என்னை அழைத்தாள் யான் அப்போது வெம்மை என்று மெல்லச் சொன்னேன் இதுவே நிகழ்ந்தது” எனச் சொன்னாள்

14. அவன் நாட்டுக்குப் போவோமா?

அம்ம வாழி, தோழி கொண்கன் நேரேம்ஆயினும், செல்குவம்கொல்லோகடலின் நாரை இரற்றும் மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே? - ஐங் 114 தலைவி, "தோழியே கேள்! நெய்தல் தலைவன் உள்ள வழி நாமே போய் அடைவதற்கு ஏற்ற உரிமை நமக்கு இல்லை. ஆயினும் கடல் நாரை வந்து தங்கி ஒலிக்கும் மடல் பொருந்திய பனை மரங்கள் நிறைந்த அவன் நாட்டுக்குப் போய் வருவோமா?" என்று தோழியிடம் உரைத்தாள்.

15. தலைவன் இற்புறத்தான்் அம்ம வாழி, தோழி பல் மாண் நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய தண்ணம் துறைவன் மறைஇ, 'அன்னை அருங் கடி வந்து நின்றோனே! - ஐங் 115 தலைவி, "தோழியே கேட்பாயாக பலவகை மாட்சிமைப் பட்ட நுட்பமான மணல் செறிந்த கடற்கரையில் நம்மோடு கூடி ஆடிய குளிர்ந்த துறைவன் மறைந்து, அன்னையின் கடத்தற்கரிய காவல் அமைந்த இற்புறத்தே வந்து நின்றாள்" என்று தோழியிடம் கூறினாள்.

16. மாலைப் போதே இது!

அம்ம வாழி, தோழி! நாம் அழ நீல இருங் கழி நீலம் கூம்பும்