பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 8 16t

எறிவன போல வரூஉம் உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.

- பொதும்பில் கிழார்மகன் வெண்கண்ணி நற் 375 “நீண்ட கிளைகளையுடைய புன்னை மரத்தின் நறிய தாது உதிரும்படி அம் மரக்கிளையின் மீது அழகாக அமர்ந்தி ருக்கும் நாரையின் கூட்டம் இரைவேண்டிப் புறப்படும் பல் பூங்கானலையும் மிக்க நீரையுமுடைய சேர்ப்பனே, நீ அன் புடையவனில்லை. இருந்தால் மணம் செய்து கொண்டி ருப்பாய் யான் அவளது அறிவின் வழியே ஒழுகுபவள். இருந்தும் என்னிடமும் சொல்லுவதற்கு நானும் நன்னுத லாள் அவள். பெருங் கடலிடத்து இராப் பொழுதிலே தண்கதிர்த் திங்கள் தோன்றியதால் வலிய அலைகள் எறிவன போல வரும். உயர் மணல் உள்ள கொல்லைகளையுடைய எம் உறைவின் ஊரிடத்து, அவள் உவப்ப நீ அவளை மணம் செய்ய வருவாயாயின் அது ஒரு நல்ல அறச் செயலாகும்" என்று மணவாது நீட்டிக்கும் தலைவனிடம் தோழி மணந்துக் கொள்ளக் கூறினாள்.

263. யாமம் கழிய காமம் மிகுதே

யாமமும் நெடிய கழியும், காமமும் கண்படல் ஈயாது பெருகும், தெண் கடல் முழங்கு திரை, முழவின் பாணியின், பையயப் பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும், ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய் அயல் இற் பெண்டிர் பசலை பாட, ஈங்கு ஆகின்றால் தோழி, ஒங்கு மணல் வளி ஆர் சிறு மனை சிதைஇ வந்து, பரிவுதரத் தொட்ட பணிமொழ நம்பி, பாடு இமிழ் பணி நீர்ச் சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பினது அளவே.

- வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் நற் 378 "தோழி, யாமங்கள் நெடும்பொழுது உடையனவாய்க் கழிகின்றன. காமமும் என்னைக் கண்ணுறங்க விடாமல்