பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பெருகுகிறது தெளிந்த கடலில் முழங்கும் அலைகள், முழவின் ஒலிபோல் மெல்ல மெல்ல ஒலித்துப் பல நாள்கள் ஆறாத பழம்புண் உற்றாரைப் போலப் புரண்டு புரண்டு அக் கடலில் வீழ்கின்றன. அவையெல்லாம் அப்படி நம்மை வருத்தவும் இரவு கழிந்து போகவில்லை; பொழுது விடிந்து ஞாயிறு தோன்றிய பாடில்லை உயர்ந்த மணற் பரப்பிலே புனைந்து கோலமிட்ட சிறிய மணற் சிற்றிலைச் சிதைத்து நம்மிடம் வந்து அன்பு உண்டாகும்படி கூறிய பணிவான மொழியை நம்பி ஒலிக்கும் குளிர்ந்த கடற்கரைச் சேர்ப்பனொடு ஆரா யாமல் பொருந்திய நட்பின் அளவானது, அலர் கூறும் வாய் உடைய அயல் வீட்டுப் பெண்டிர் நம் பசலையைக் குறித்துத் துாற்றும்படி இவ்வாறு ஆயிற்று" என்று தலைவன் ஒரு புறம் இருக்க, அப்போது அவன் கேட்கத் தோழி சொல்லினாள்.

264. ஆருயிர் அழியினும் காதல் நோய் உரைப்பதோ?

கானல் மாலைக் கழி நீர் மல்க, நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த, ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்திப், புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, ஆர் உயிர் அழிவது ஆயினும் நேரிழை கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த் தண்ணம் துறைவன் நாண, நண்ணார் தூற்றும் பழிதான்் உண்டே.

- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் நற் 382 “நேரிய அணி அணிந்த தோழி, பரந்த கடல் நீரையுடைய குளிர்ந்த துறைவன் நானும்படி நண்ணாராகிய பெண்கள் துற்றும் பழி தான்் மிகுதியாக உண்டல்லவா! எனவே கடற் கரைச் சோலையில் மாலைக் காலத்திலே கழியிடத்து நீர் பெருக, நீலநிற நெய்தற் பூவின் நிரையாகிய இதழ்கள் குவிய, ஓயாது அலையடிக்கும் கடலில் மீன்களைத் தின்று பறவைக் கூட்டம் ஆணும் பெண்ணுமாகக் கூட்டில் ஒன்றாய்ப் போய்ச் சேரும் அந்த மாலைக் காலத்தை அவர் நினைக்கவில்லை.