பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

163


எனினும் நம்மைத் துறந்தவரை நினைத்து நாம் அவர் இருந்த விடத்து இருந்து மிகவும் வருந்தி ஆருயிர் அழிவதாயினும் பிரிவுநோய் மற்றவர்க்குத் தெரியாதவாறு மறைத்தல் வேண்டும்” எனக் களவில் தலைவன் வராத பொழுது தலைவி தோழியிடம் இவ்வாறு கூறினாள்.

265. தலைவ, தனியாய் வருகிறாய் எல்லை சென்றபின், மலரும் கூம்பின; புலவு நீர் அடைகரை யாமைப்பார்ப்போடு அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி இரை நசை வருத்தம் வீட மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன, அதனால், பொழுதன்று ஆதலின், தமியை வருதி எழுது எழில்மழைக்க.-- - அஞ்சிலாந்தையார் நற் 385 “ஞாயிறு சென்றபின் மலரும் கூம்பின. புலால் நாற்ற முள்ள நீரின் பரந்த கரையிலுள்ள யர்மைக் குட்டியோடு நண்டும் தத்தம் வளையாகிய இருப்பிடம் போய்ச் சேர்ந்தன. வளைந்த கழியில் இரை விரும்பிய வருத்தம் நீங்க, பறவை களும் தம் குஞ்சுகளோடு மரத்தின் மேல் போய்த் தங்கின. அதனால் பொருத்தமான பொழுதன்று ஆதலின் நீ தனியாக வருகின்றாய்” என்று தலைவி தலைவனிடம் கூறினாள்.

266. நெஞ்சிலிருந்து நீங்காது உள்ளான்!

அம்ம வாழி, தோழி! நன்னுதற்கு - யாங்கு ஆகின்றுகொல் பசப்பே - நோன் புரிக் கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித் திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளி.இ நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் கடல் மீன் தந்து, கானற் குவைஇ, ஓங்கு இரும் புன்னை வளி நிழல் இருந்து தேம் கமழ் தேறல் கிளையோடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன் எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே.

- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் நற் 388