பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


செல்க' என்று தலைவனைத் தோழி கூறி தலைவியை மணம் முடிக்கக் கூறினாள்.

269. எதிர்மொழி கூறா ஏந்திழை உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே; விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே; நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து, ஒரை மகளிரும், ஊர் எய்தினரே, பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் முன், சென்மோ, சேயிழை? என்றனம்; அதன் எதிர் சொல்லாள் மெல்லியல், சிலவே நல் அகத்து யாணர் இள முலை நனைய, மாண் எழில் மலர்க் கண் தென் பனிக் கொளவே.

- உலோச்சனார் நற் 398 அச்சம் செய்யும் தெய்வமும் மறைந்து வாழவில்லை. விரிந்த கதிரையுடைய ஞாயிறும் மேற்கே சாயும். ஒரை விளை யாடிய மகளிரும் நீராடிக் கலைந்த கூந்தலின் நீரை பிழிந்து புலர்த்தி முடித்து அழகிய வயிறு குலுங்க ஒடி ஒன்று சேர்ந்து தம்மூர் அடைந்தனர். அன்னபொழுதில் பன் மல ருள்ள நறும்சோலையில் உன் காதலியை வணங்கி யாம், 'சேயிழாய்! அவர்களுக்கு முன் செல்வோமா?’ என்று கேட்டேன். அதற்கு மெல்லியலாளான அவள் தன் புதிய இளைய கொங்கை நனைய, மாட்சிமைப்பட்ட அழகுடைய மலர் போன்ற கண்ணிலிருந்து தெளிந்த கண்ணிர் வடித்தாளே தவிர சிலவாய மொழியும் எதிர்மொழியாகக் கூறினாள்

இல்லை.”