பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


இர வந்தன்றால் திண் தேர்; கரவாது

ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்

அரவச் சீறுர் காணப்,

பகல்வந் தன்றால், பாய்பரி சிறந்தே.

- குமுழிஞாழலார் நப்பசலையார் அக 160

நிறைவான கருப்பம் அடைந்த ஆமையானது அடும்புக் கொடி சிதையுமாறு அதை இழுத்து வளைந்த கழியின் வெண்மையான மணல் மேட்டின் பக்கத்தே சேர்ந்து அதில் மறைய ஈன்று, புதைத்த யானைக் கொம்பினால் செய்த வட்டுப் போன்ற வடிவம் உடைய புலால் நாறும் முட்டையை மறைத்து வைக்கும். அதைப் பிளவுடை வாயையுடைய ஆண் ஆமை அம் முட்டையினின்று குஞ்சு வெளிப்படும் அளவு பாதுகாக்கும் இத்தகைய சோலையை யுடைய கடற்கரைத் தலைவன் அவனது, வன்மையான தேரானது அம்பின் விரைவு போல் அழகிய நடையைப் பெற்ற குதிரைகள் தாற்றுக் கோலால் குத்தினால் வேகம் அளவு கடந்து போய் விடும் என அஞ்சிக் கடிவாளத்தால் குறிப்பிக்க, மெல்லச் செல்லும் அது செழித்த நீர் வாய்ந்த கழியைக் கடக்கும் போது, அத் தேர் உருளையின் கூர்மையான முனையால் அறுக்கப்பட்ட அடும்புகளை நெய்தல் மலர் பாம்பின் மேலே துக்கிய தலைபோல் வாடி மேல் எழும் இஃது இரவுக் காலங் களில் இதுவரை நிகழ்ந்து வந்தது இன்று அந்தத் தேர், பாய்கின்ற வேகத்தால் சிறப்புற்று மறையாமல் ஒல் என ஆரவாரம் செய்யும் ஏவல் இளையருடன், வலிய வாயால் பழி யெழுப்பும் சிறிய ஊர் மங்கையர் காணும்படியாய் இன்று பகலிலேயே வந்தது இச் செய்தியைக் கேட்டு இது நன்மையானதாகவும் இருக்கலாம் என எண்ணாமல் என் நெஞ்சம் நடுங்கியது கரிய கூந்தலைக் கொண்ட தோழியே! உனக்கும் அவ்வாறு நெஞ்சம் நடுங்கியதோ? என்று தோழி மணம் முடிக்கச் சொல்லினாள்

286. நண்டே தலைவர்க்கு துன்பத்தைக் கூறு!

கானலும் கழறாது கழியும் கூறாது, தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது;