பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


சேணின் வருநர் போலப் பேணா, இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின், வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினை இத், 'துறையும் மான்றன்று பொழுதே, கறவும் ஒதம் மல்கலின் மாறு ஆயினவே, எல்லின்று தோன்றல் செல்லாதீம் என எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, இளையரும் புரவியும் இன்புற, நீயும் இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.

- உலோச்சனார் அக 300 பெருமானே! விடியற்காலத்தில் வலையினால் மீன்களைப் பிடித்துக் கொணரும் மீன் பிடித்தலில் வல்ல பரதவர். தாம் வலையால் பிடித்து வந்த மீன்களை நுண்மணல் பரப்பாகிய நெய்தல் நிலத்தில் உலர்த்துவதற்காக இடுவர். அவரது பறி யினின்றும் சிதறிய மீன்களைப் பறவைகள் தின்னும் இத் தன்மை கொண்ட கானலை உடையது பெரிய துறை

குளிர்ந்த சோலையில் பகற் பொழுது சென்றதாக, உன் ஊர்க்குச் செல்லத் தேரைப் பூட்டும்படி ஏவி இவளது திரண்ட நெருங்கிய வளையலைத் திருத்தி, சிதறிய கூந்தலைத் தடவி, 'மங்கையே" என்று நீ கூறிய அளவில், இவள் மிகவும் அழுது வருந்துகின்றாளாதலால் அதனை நினைத்துப் பாராது அயலார் போல் பிரிந்து சென்றால், 'இவள் விரைவாய்த் தீங்கு அடையினும் அடைவாள்' என்று நான் அஞ்சுகின்றேன் அதனால்,

யான் கூறுவதை நீ கேட்டருள்வாயானால் நீயும் நின் இளையரும் தொலைவினின்றும் வருவார் போல் கருதாமல், மிக்க ஆரவாரமுடைய அழகிய எம் சிற்றுாரில் வந்தால், எங்கள் வீட்டினர் விரைவாய் அன்புடன் எதிர்கொண்டு அழைத்து, மெல்லென வினாவி, 'பொழுது மயங்கியது நீர்த் துறையும் அலை பெருகி ஏறுகின்றதால் சுறாமீன்களும் பகை யாய் ஆயின. இருண்டுவிட்டது தலைவ, தின் ஊர்க்குச் செல்ல வேண்டா” எனக் குறையிரந்து வேண்டுவர் அங்கு இன்பம் அடையத் தங்கி, நின் ஏவலாளரும் குதிரையும்