பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

205


மலர் போன்ற மையுண்ட விழிகளைப் பெற்ற எம் தோழி யின் துன்பமும், ஊரார் கூறும் அலர் மொழியும் நீங்கு மாறு நீ அருள் செய்யாமல் பொய்த்துப் போனாலும், பெரிய உப்பங்கழியைத் துழாவி மீனைப் பிடித்து உண்ணும் குறுகிய காலையுடைய அன்னப் பறவை அடுப்பங்கொடி பொருந்திய மணல் மேட்டிலிருந்து தன் அழகிய சிறகை உலர்த்தும். வளைவான கிளையையுடைய புன்னை மரத்தின் பூங்கொடி அழகு செய்யும் பெரிய துறை. அதில் நெகிழ்ச்சி யுடைய மணலைப் பிளந்து கொண்டு வந்த கொடிஞ்சியை யுடைய நீண்ட தேரை யாங்கள் கட்டிய வண்டல் பாவை அழியும்படி ஒட்டி வந்து நீ இவள் தோள் நலத்தை துய்த்தாய். அந்த நாளில் இக் கடல் சான்றாக நீ கூறிய சூளும் பொய்யோ? என்று தோழி வினவி மணமுடிக்கக் கோரினாள்.

302. மறைந்தது தலைவரின் தேர் கழிப் பூக் குற்றும், கானல் அல்கியும், வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் எய்தின்றுகொல்லோ தான்ே? எய்தியும், காமம் செப்ப, நாண் இன்று கொல்லோ? உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; குப்பை வெண் மணற் குவவுமிசையானும், எக்கர்த் தாழை மடல்வயினானும், ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த கடுஞ் செலல் கொடுந் திமில் போல, நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!

- உலோச்சனார் அக 330