204
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்
அதனால், இன்று இங்கு இருப்பதை விரும்ப வேண்டா! உப்பு மூட்டையை ஏற்றி வரும் உப்பு வாணிகர் வண்டி வரிசையுடன் அங்கு வந்த அடைகாக்கும் கோழிப் பேடை அஞ்சியோட, இடி போன்ற குரலை உடைய அலை ஒலித்து எழுந்து சிதறி விடும் கடலை எல்லையாய்க் கொண்ட எமது சிறிய ஊர், சிறிது சென்ற வழி அந்த மலர்கள் விரிந்த புன்னையின் மேலே உயர்ந்து தோன்றும் பனை மரத்தி னின்றும் கூப்பிடு தொலைவில் உள்ளதாகும் அங்கு நீவிர் நாளை வருக என்று தலைவனிடம் தோழி இயம்பினாள்
301. நீ கூறிய சூளும் பொய்யோ?
ஒங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளிஇ, திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்பl மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் வண்டற் பாவை சிதைய வந்து, நீ தோள் புதிது உண்ட ஞான்றை, சூளும் பொய்யோ, கடல் அறி கரியே? - மதுரைக் கூலவாணிகள் சித்தலைச் சாத்தனார் அக 320 உயர்ந்த அலைகளையுடைய கடலில் வலிந்து இழுக்கின்ற விசையைக் கொண்ட ஒடத்தைச் செலுத்திய பரதவன் அஞ்சாமை கொண்ட வலிய மீன்களைக் கொணரத் தழையை அணிந்த அல்குலையுடைய அவன் தங்கையர் விழா நிகழும் தெருக்களில் இன்ன விலை என்று கூறி விற்பர் இத்தகைய கடற்கரைச் சோலை சூழ்ந்த சிற்றுார்களையுடைய கடற் கரையை உடைய தலைவனே!