பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


இனிய ஊரில், நீ இன்று எங்களுடன் தங்கிச் சென்றால் அதனால் உண்டாகும் குற்றம் யாது?

இன்று நீ இங்குத் தங்கினால், பசிய மீனை விற்றுப் பெற்ற வெண்ணெல்லின் மாவைத் தயிரிட்டுப் பிசைந்த கூழை நின் குதிரைகள் உண்ணும். உனக்கு, வடநாட்டில் உள்ளவர் கொணர்ந்த வெண்மையான நிறத்தையுடைய வட்டக்கல்லில் குடமலையான பொதியில் மலைச் சந்தனக் கட்டையால் பிற நறுமணப் பொருள்களையும் கூட்டி உண்டாக்கிய வண்டுகள் ஒலிக்கும் நறுமணச் சாந்தை அணிவிப்போம்.

பல நாளும் இருவருடைய துன்பமும் நீங்கும்படி நீ பகற்பொழுதில் வந்து, புன்னைமரச் சோலையில் இனிய நிழலில் அப் பகற் பொழுதைக் கழித்து, மாலைப்போது வந்தவுடன் அதனை மயக்கம் நீங்கப் பார்த்து, உன் பாகன் தேரினைப் பூட்டுதலை ஆராய்ந்து அழகிய அத் தேரைச் செலுத்த நீயும் ஊர்க்குப் போதற்கு விரும்புவதைக் கை விடுவாயாக! என்று பகற்குறிக்கண் தோழி தலைவனிடம் சொன்னாள்.

304. எம் மனையில் இருந்து செல்க

கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, எறி திரை ஒதம் தரல் ஆனாதே,

துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப வழங்குநர் இன்மையின் பாடு அன்றன்றே; கொடு நுகம்ம நுழைந்த கணைக் கால் அத்திரி வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகக் சேந்தனை சென்மோ - பெரு நீர்ச் சேர்ப்பlஇலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,