பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தி அன்பொடு புணர்ந்த ஐந்திணை - தெய்தல்

இந்த அகன்ற உலகத்திற்கு ஒளியூட்டி மகிழ்ந்த கதிரவன், தன் கதிர்களை அவனே குறைத்தவனாய் மேற்றிசை மலை யிலே சென்று மறைந்தான்் ஆழிப் படையைக் கொண்ட திருமாலின் நிறம்போல எங்கும் இருள் பரவுகின்றது இந்த இருளை ஒட்டிட நிலவு எழுந்து வரவும், கணவரை இனிது கூடிப் பின்னர் துயில் பெற்றவர்களைப் போலத் தாமரை முதலிய பூக்களும் குவியத் தொடங்கின

தம் புகழைப் பிறர் கூறக் கேட்ட சான்றோர், தம் தலை தாழ்த்தியிருப்பதுபோல மரங்களும் துயிலத் தொடங்கின முல்லை மலர்களும் விரிந்து மணம் பரப்பி நின்றன புல்லாங் குழலின் இனிய நாதம் போல வண்டுகள் இசைத்துப் பறந்தன பறவைகள் தங்கள் குஞ்சுகளை எண்ணியவையாய் மரங்களி லுள்ள தம் கூடுகளை நோக்கிப் பறந்தன. பசுக்கள் தம் கன்று களை நினைந்தவையாய் தொழுவ்ங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. பிற விலங்குகளும் தத்தம் இடத்தை நோக்கி விரைந்தன. அந்தணர்கள் தாம் செய்ய வேண்டிய காரியங்களை முறையாகச் செய்து, அந்திக் காலத்தை வர வேற்றனர் பெண் களும் செந் தீயாலான விளக்குகளை ஏற்றத் தொடங்கினார்கள் இவ்வாறு வந்த மாலைக் காலமானது மகளிரின் உயிரை அவர்களின் உடலில் இருந்தும் பிரிந்து செல்வதுபோல வந்ததே இதன் கொடுமையை அறியாதாராய் இதை மாலைக் காலம் என்று பெருமையுடன் பேசி மகிழ்கிறார்களே! என்று பிரிவாற்றாத தலைவி தோழியிடம் கூறினாள்

312. பகைகெட்டது போல் மாலை ஒளித்தது 'அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான், வெருவுள உய்த்தவன் நெஞ்சம் போல், பையய இருள் துர்பு புலம்பு ஊர, நனை சுடர் கல் சேரஉரவுத் தகை மயங்கித் தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம்மாறிக் சுரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்பதோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக, நால் திசையும் நடுக்குறுஉம் மடங்கல் காலை