பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

225


காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி, சிறிய துணித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை, பலவும் நூறு அடுக்கினை, இனைபு ஏங்கி அழுதனை, அலவலை உடையை என்றி தோழி!

கேள், இனி: மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன் காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன், அறியினும், பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல். இருள் உறழ் இருங்கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன் தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன், அறியினும், அருளி அவன் சிறிது அளித்தக்கால், என் மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்.

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன் உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன், அறியினும் புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என் அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்.

அதனால்

யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த காம நோயின் கழி இய நெஞ்சம் தான்் அவர் பால் பட்டதாயின் நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே. - கலி 122

மாலை போல் ஒழுங்காக நின்று விளையாடும் தோழி யரும் தாயரும் அறியுமாறு பூவின் அழகை உடைய கண்கள் நலத்தை இழக்கும்படி முன் நம்மிடத்தில் காதலைக் கொண்டி ருந்து, பின்பு நமக்கு அருள் இல்லாது ஒரு காரணம் இன்றி நம்மைத் துறந்தார் என அவரிடம் முன்பு சிறிதாய் வெறுப்புக் கொண்டாய். பின்பு அவர் நமக்குப் பொருத்தமற்ற குறை களைச் செய்ததால் அவற்றைப் பல நூறாய் அடுக்கிக் கூறினை. அதுவுமே அன்றி வருந்தி ஏங்கி அழவும் செய்தாய்! ஆதலால் நீ மனம் சுழலுதலைப் பெற்றுள்ளாய் என்று சொல்கின்றாய் தோழியே! என் அலமரலைக் கேட்பாயாக!