பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

235


முன் மிக்குவந்த நீர் பின்பு வற்றுதலால் குறைவாய் விழுகின்ற கயல் போன்ற கண் நீர் அற்றுக் கசிவாய்க் குறைந்து நிற்க, வருத்தத்துடன் அழுமாறு நீ இவளைத் துறந்து, நின் நெஞ்சம் நடுங்குதற்குக் காரணமான காம நோய் தீரும்படி சுறா மீன் முதலியவற்றை உடைமையால் கொடிய கழிகள் சூழ்ந்த மலைபோல் உயர்ந்த வெண்மையான மணல் மேட்டிடத்து நீ செய்த குறியிடத்துத் தவறாமல் வந்தாள் என்பதாலோ!

தனது அறிவு வருத்தத்தில் ஆழ்ந்து அழுது ஆராய்ந்த நலம் சிறிது ஆதலால், முன்பு வளை தோளிலிருந்து கழன்று விழ இவளைத் துறந்து, சீர் அலை ஒலிக்கின்ற கடற்கரையில் உன் தேர் இன்ன காலத்தில் வரும் என்ற குறிப்பு இன்றிப் பல நாளும் வரும் காலத்தை மனத்தால் கருதி எதிர் கொண்டாள் என்பதோ!

பசிய மூங்கில் தன் நலம் கெடுவதற்குக் காரணமான தோள்களில் கிடந்து விளங்கும் அணிகளை உடைய தோள், அதைப் பொறுக்க மாட்டாமல் மெலிவடைந்து நெற்றி பசலை கொள்ளும்படி துறந்தது பார்த்தவர்க்குக் காட்சி வரும்படியாய்ச் செய்த அழகைத் தான்் பெறும் இந்தப் பணித் துறையில் நள்ளிரவில் நீ வந்து செய்த நின் வருகை உணர்த்திய குறியில் தப்பாமல் வந்தாள் என்பதாலோ!

வன்மை பொருந்திய நீரையுடைய சேர்ப்பனே, உனக்குச் செய்ந்நன்றிக் கேடு உண்டு ஆதலால் அது நீங்க ஞாயிறு சுடும் என்று எண்ணி ஓங்கும் அலை தன் கரையில் நெருங்கி யுள்ள அடும்புக் கொடியை விரைந்து தந்தாற் போல் இவளுடைய முன் கையில் வளை கழலுகின்ற வருத்த நோய் தீருமாறு அருள் உடையவனாய் மணந்து கொள்வாய் என்று தோழி தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்று தலைவனை வேண்டினாள்

319. காதலி கண்ட கனவு

தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று, வாடை தூக்க, வணங்கிய தாழை

ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,