பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

253


யுடையது அதில் வளையினின்று வெளி வந்து விளையாடும் புள்ளிகளையுடைய நண்டு மன வேட்கை கெடாத சூதாடும் இடத்தில் வடுவுடைய சூதாடு காயை வேட்கை தவிராது உருட்ட, அக் கவற்றைப் போன்று விளங்கும் விருப்பம் பொருந்திய பொலிவையுடைய சேர்ப்பனே

முத்து போன்று விளங்கும் எக்கரான மணலில் நீ கூடுவதற்கு முன்னால் இடும் தாயம், முன்பு மனை கட்டக் கவற்றால் ஈரைந்தைப் பெற்றவனின் மனம் போன்று ஆக்கம் பெருகினவள் அவ்வாறு அருள் செய்வதனின்று நீ நீங்குதலால் அந்தப் பெரிய தாயம் இன்றி ஈரிரண்டு இரு மூன்று' என்ற சிறு தாயம் இடுவதால் தோற்றவனைப் போன்று அழகு அழிந்து வெய்யது ஆகிய வருத்தத்தில் அழுந்திடவோ?

முடமான தாழை முடுக்குக் குள்ளே நீ கூடப் போரிடை யிலே சிறிய தாயம் இட வேண்டிய அளவில் சிறுதாயம் உண்டாகக் கண்டவனின் மனம் போல் ஆக்கம் பெருகியவள், உறவினர்க்குப் பொருளைத் தந்து மணந்து கொள்ளத் தக்கவனே, நீ முன்பே பொருளைத் தேடாமல் இப்போது பொருள் வயின் பிரிவை ஆராய்ந்து பார்த்தாயாயின், சிறு தாயம் இடவேண்டிய அளவில் இடாமல், பெருக இட்டு வெல்லும் வழியற்ற வழியில் சூதாடுகையால் அதற்கென்று கட்டி வைத்த தன் பொருளை இழந்தவனைப் போல் மிக்க துன்பத்துள் வருந்தவோ?

நறு மணமுடைய மலரையுடைய புன்னை மரத்தின் கீழே நீ விரும்பிக் கூட இருகாற் சிறுதாயம் இட வேண்டிய அளவில் ஒருகாலன்றியே இருகாலாவதும் சிறு தாயம் இட்டவன் மனம் போல் ஆக்கம் பெருகியவள் இவள், நீ பிரிந்து போய் வந்து மணப்பேன் என்று எமக்கு அறிவித்துப் பிரிய எண்ணின உன் பொருட்டாய் அக் கவறு இருகால் சிறு தாயம் இட வேண்டின அளவிலே ஒரு கால் சிறு தாயம் இடப்பட்டவனைப் போல் செறிந்த துயரிலே வருந்தவோ?

நீ பலரும் தூற்றும் அலருக்கு அஞ்சாய்; இதைக் கைவிட்டு இவளை மணந்து கொண்டு கூடுதற்கு அருளி அதற்குரிய திறத்தை அறிந்து எழுந்து தேரில் ஏறுவாயாக