பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

263


பொன்னின் விளக்கம் போன்ற ஆவிரம் பூவாற் செய்த கண்ணியும் உழிஞைப்பூவுடன் பூளைப் பூவும் மயில் உதிர்த்த பீலியும் விளங்கும் பூ அன்று. என் உள்ளத்தால் நன்று என்று எண்ணி நான் கட்டிய பூந்தார் என்றும் அறிவீராக! திரு மாலின் மகனான காமன் என் தலைமையை அழிக்க விரும்பிக் கொடுக்கப்பட்டுத் தன் உடலில் அத்தகைய நன்மைகள் எல்லாம் தோன்றிய வனப்பாலும் சாயலாலும் வடுவகிரின் தன்மை கொண்ட விழிகளாலும் என் மனம் என்ற அரண் இடிந்து விடும்படி நடுவே வந்து என்னைக் கவர்ந்து கொள்ளும் ஒப்பில்லாதவளுக்கு நான் வழிபட்டு உறைதலை உலகத் தார்க்குக் காட்ட வேண்டிச் செல்கின்றேன். இதைக் கண்டு நீவிர் மனத்தில் வெறுத்துத் தளராதீர். நான் அத் தன்மையுடைய ஒருவன்” என்றான்.

“நீங்கள் என்னை நீ ஒன்றைப் பாடு எனக் கூறுவீராயின் எப்படியேனும் சிறிது பாடவும் வல்லேன், அம் மடல் மா மேலிருந்து, அம் மடல் மா இடமாகவும் வலமாகவும் அசையு மாறு உன் உடலை அசைப்பாய் என்று எனக்குச் கூறுவீரா யின், நான் அங்ங்னமே செய்வேன், இப்போது என் நெஞ்சின் காம நோயை ஆற்றும் மருந்தாக நன்னுதல் தந்த இந்தக் குதிரையைப் பாடுவேனா” என்றான்.

(அவர்கள் பாடு என்று கூறாததால் அவன் தலைவி தன்னை வருத்தியதைக் கூறுகிறான்.)

"திங்களைப் பாம்பு மறைக்கும் போது சான்றோர் அதனைக் கண்டு அதன் வருத்தம் தீர்க்க மாட்டாராயினும் அதன் மீது தமக்குள்ள அன்பைக் காட்டித் துன்பம் அடைவர். அதைப் போன்று இனிய மென்மையை உடைய மாதின் துன்பம் செய்யுப் பார்வையில் அகப்பட்ட என்னுடைய நெஞ்சில் காம நோயினைக் கண்ணால் பார்த்தும் இந்த ஊரில் உள்ளவர் அதைத் தீர்க்க மாட்டார் என்றாலும் கண் ணோட்டம் செய்யவில்லையே.

“மற்றவரால் தாங்க முடியாத சினத்துடன் தன் வடிவைக் காட்டி உயிரைப் போக்குகின்ற பாம்பும் பலர் நடுவில் அகப்பட்டால் சாகாது என்பது உலக வழக்கு, அதற்கு ஏற்பச் சான்றோர் அவையில் அகப்படின் உயிர் பிழைக்கவும் கூடும்.