பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


உமக்குத் தகுமோ என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைக்காமல் இருப்பாயாக" என்றாள் தோழி யிடம் தலைவி பக்கம் இருந்த தலைவன் கேட்கும்படி

143. இருத்தல் வேண்டும் என்னுடன்

இது மற்று எவனோ - தோழி! - முது நீர்ப் புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், இணர் வீழ் புன்னை எக்கர் நீழல், புணர்குறி வாய்ந்த ஞான்றைக் கொண்கற் கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல் கேட்டனமன் எம் செவியே, மற்று - அவன் மணப்பின் மாண்நலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப, எம் தடமென் தோளே?

- வெண்மணிப் பூதி குறுந் 299 "தோழி, பழையதாகிய கடலின் அலை அளவளாவுகின்ற, பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள, பூங் கொத்துகள் மலர்ந்த புன்னை மரம் வளர்ந்த மேட்டிலுள்ள நிழலில் புணர்குறிப் பெற்ற காலத்தில் எம் கண்கள் தலை வனைப் பார்த்தன; எம்முடைய செவிகள் அவனுடைய சொற்களைக் கேட்டன; என்னுடைய பரந்த மெல்லிய தோள்கள் அவன் என்னை மணந்ததால் மாட்சிமைபெற்ற அழகைப் பெற்று பின் அவன் பிரிந்ததால் சோர்வடைந்தன. இஃது என்ன வியப்பு!” என்று தோழியிடம் தலைவி வினாவினாள்

144. இனிச் செய்யக் கூடியது கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு அடைகரைத் தாழைக் குழிஇப், பெருங் கடல் உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் பசந்தனள்மன் என் தோழி - என்னொடும் இன் இணர்ப் புன்னை.அம் புகர் நிழல் பொன் வளி அலவன் ஆட்டிய ஞான்றே.

- அம்மூவன் குறு 303