பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

எவ்வாறு செல்வாய்?" என்று பிரிவினை உணர்த்திய தலை வனிடத்தில் தோழி வினவினாள்.

210. நெஞ்சமே நான் வரவில்லை மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்

துத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்; நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; அன்பு இலை, வாழி என் நெஞ்சே! வெம் போர் மழவர் பெரு மகன் மாவண் ஒரி கை வளம் இயைவது ஆயினும், ஐதேகு அம்ம, இயந்து செய் பொருளே.

- பாலத்தனார் நற்றி 52 ‘கரிய கொடியையுடைய காட்டுமல்லிகைப் பூவோடு தூய பொன் தகடு போன்ற பாதிரிப் பூவையும் சேர்த்துச் சூடிய கூந்தலினுடைய கமழ் மணம் மருவி இவளின் தேமல் படர்ந்த மார்பை அடையப் பொருந்திச் சிறந்த இனிய தழுவலினின்று யாம் நீங்காமலிருக்கிறோம் என் நெஞ்சே! நீயோ, செய்யும் தொழிலைச் சிறப்பாக எண்ணி நாள்தோறும் பிரிந்திருக்கும் வாழ்க்கையை விரும்பி அமைதி கொள்ளாதி ருக்கின்றாய். அதனால் நீ அன்பில்லாத நெஞ்சினனாய் உள்ளாய். எனினும் நீ வாழ்க, வெவ்விய போரைச் செய்யும் வீரர்களின் தலைவனாகிய சிறந்த வள்ளல் தன்மையுடைய ஓரி என்பானது கைவளம் நம்மைப் பொருந்து வதாயினும், மனம் பொருந்திச் செய்யும் அப் பொருள்மிக சிறியதேயாம். இவளோடு வாழும் வாழ்வுக்கு இணை யாகாது.” என்று தலைவனின் செலவைத் தலைவி நிறுத்தக் கோரினாள்.

21. எங்கே சென்றது என் உள்ளம்?

குறு நிலைக் குரலின் சிறு நனை நறு வீ வண்டு தரு நாற்றம் வளி கரந்து ஈயக்,