பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 115

தடியோ என ஐயம் கொண்டது போலக் கொன்றையின் அழகிய இனிய கனிகள் காம்புகளோடு பாறையின் அறைந்து விழும்படி கிளைகள் அசைய, வெம்மையான காற்று வீசும் மூங்கில் நெருங்கிய காட்டில் துன்பமிக்க அரிய வழியைக் கடந்து நல்ல வாய்ப்பில்லாத வாழ்க்கைக்கு உரிய நிலையற்ற பொருள் பற்றுக் காரணமாக யாம் பிரிதும் எனக் கூறுவீர் அதனைக் கை விடுவீராக அவளை உடன் கொண்டு செல்லல் நல்லது” என்றாள் தோழி, பிரிவு உணர்த்திய தலைவனிடம்

209. விழிகளில் தோன்றும் வெய்ய காடு!

அன்றை அனைய ஆகி, இன்றும், எம் கண் உளபோலச் சுழலும்மாதோ - புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ வைகுறு மீனின் நினையத் தோன்றிப், புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடைக், கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர் வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது அமரிடை உறுதர, நீக்கி நீர் எமளிடை உறுதர ஒளித்த காடே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 48 “தலைவ, புல்லிய புற இதழையுடைய கோங்கு மரத்தின் மெல்லிய இதழ்களையுடைய குடைபோன்ற பூக்கள் விடி வெள்ளிகள் என்று நினைக்கும்படி தோன்றும் அப்படித் தோன்றி வெளியழகு கொண்ட பூக்கள் மணக்கும் காட்டிலே, கிடின் என்ற ஒலியோடு முழக்கி அழகிய வீரவளை அணிந்த மறவர்கள் கூர்மையான அம்பினால் இயற்றும் கொடும்போர் செய்ய அஞ்சாது தோன்றுவர் தோன்றிய மறவர்கள் போரின் நடுவே வருத்தமுற அவர்களைத் துரத்தியும், எம் சுற்றத்தார் எம்மைத் தேடி வந்தபோது யாம் அவரோடு சேர்ந்து கொள்ள விட்டு ஒளிந்து கொண்டும் நீ முன்பு ஒருமுறை செயற்பட்டாய் அவ்வாறு உன் திறமை காட்டப்பட்ட இடமாகிய காடு அன்று எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இன்றும் எம் கண் முன் இருப்பது போலச் சுழலும் அதில்