பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 邯21

லோர் தூற்றும் அம்பலையும் எனக்குக் கொடுத்து விட்டுத் தாம் செல்வர் என்ப. இனி யான் எவ்வாறு ஆற்றுவேன்” என்று தலைவன் பிரிவு அறிந்து வருத்தத்துடன் கூறினாள் தலைவி.

216. வருந்தாது நீ செல்க!

வருமழை கரந்த வால் நிற விசும்பின் நுண் துளி மாறிய உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி, அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, வருந்தாது ஏகுமதி - வால் இழைக் குறுமகள்! - இம்மென் பெர் அலர் நும் ஊர்ப் புன்னை வீ.மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் கானல் வார் மணல் மரீஇ கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே|

- - அம்முவனார் நற் 76 “முத்தாரம் அணிந்த இளமங்கையே, வரும் மழை மறைந்தது. அதனால் வெண்ணிற வானத்திலிருந்து விழும் நுண்ணிய துளிகள் மாறிப் போயின காற்றுள்ள அழகிய காட்டில் ஆலமரத்தின் நிழலிலே தங்கி, தளர்ச்சி நீக்கி என்னோடு வருவாயாக யான் உன்னோடு இருப்பதால் அஞ்சுவன கண்டாலும் அஞ்சாது வருக இளைப்பாற வேண்டியவிடத்தில் இளைப்பாறி வருக என்னோடு வருந்தாது வருக இம் என்னும் பெரிய அலராகிய பழிச் சொல்லை உடையது நும் ஊர். அவ் ஊர்ப் புன்னை மரத்தின் அரும்பும் மலரும் உதிர்ந்தன. அதனாலே தேன்போல மணப்பதும் புலால் மணப்பதுமான கானலிலேயுள்ள நீண்ட மணலிலே நடந்து சிவந்து போயின. அவை வருந்தாமல் இருக்கும் பொருட்டு மெல்லச் செல்க' என்றான் உடன்போந்த தலைவியிடம் தலைவன்.

217. செல்லாது தடுக்க இயலும்ோ?

'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ, கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்