பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 135

பக்கத்திலே பொருந்திப் போவார் வளைந்த வில்லைக் கொண்ட வழிப்பறி செய்வார்கள் மிக்கிருக்கும் நிலைமைக்கு அஞ்சாது போவார். மலைக் குகையில் கிடந்த பெரிய நகத்தையுடைய பெண் புலி, குட்டி ஈன்று நோயும் பசியு மாய்க் கிடக்கும் அதன் துன்பத்தைத் தீர்க்கச் சினம் கொண்டு சிவந்த கண்ணையுடைய பெரிய கொல்ல வல்ல ஆண் புலி உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானையின் புள்ளியமைந்த முகத்திலே பாயும். அவ்வாறான செல்லுதற்கரிய காட்டு வழியிலே அவர் செல்வார் என்று சொல்வார்கள், அதற்கு யான் வருந்தேன். நீயும் வருந்தாதே. அவர் சென்ற காரியம் கை கூடுவதாக” என்று பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலை வியைத் தோழி அமைதிப் படுத்தினாள்.

233. அவரிடம் சென்றது என் நெஞ்சம்

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, மண் திணி ஞாலம் விளங்கக், கம்மியர் செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும் தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து, உண்டல் அளித்து என் உடம்பே - விறல் போர் வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே.

- தனி மகனார் நற் 153 “கிழக்குக் கடலில் நீரை முகந்து மேற்கில் எழுந்து இருள் பரப்பி, மண் செறிந்த உலகம் மேன்மை அடைய கம்மியர் செப்புப் பானை கடையும்போது பொறி ஏற்படுவது போல மின்னி எல்லா இடங்களிலும் தன் தொழிலர்கிய மழையைப் பொழிந்து விட்டு இனிய முழக்கமுடைய முகில் தென் புலப் பக்கத்தில் சென்று சேர்ந்துவிட்டது அதுபோல என் நெஞ்சம் அவர் இருக்குமிடம் போயிற்று ஆனால் என் உடம்பு இங்குக் தனியாக இருக்கிறது. உண்ணுவதையே தொழிலாகக் கொண்டு இருக்கிறது வெற்றிப் போருடைய