பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

ஊத மாட்டாய் சிறிய குறிய உன் பெட்டையை விரும்பி நீ விரைவாகப் பறந்து சென்று அதன் மனம் மகிழத் தலையளி செய்வாய் அதனால் நீ என்னை மறந்தாய் என்மேல் அன்பில்லாதவராய் வெம்மை அருஞ்சுரம் கடந்து சென்ற காதலருக்கு நீ அங்குச் சென்று என் நிலையை உரைத்து அவர் திரும்பி வரும்படி செய்யாத உன் செயல் விரும்பத் தகுந்ததில்லை ஆதலின் நீ கொடுமையுடையாய்” என்றாள் பிரிவாற்றாத தலைவி தும்பியிடம்

270. மலைப்பாதையில் செல்ல வருந்துவளே வேம்பின்ஒண் பழம் முனை.இ, இருப்பைத் தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், நெய் தோய் திரியில் தண் சிதர் உறைப்ப, நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட் தாள் ஏய்ப்பப், பசிப் பிடி உதைத்த ஒமைச் செவ் அரை வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, அதர் உழந்து அசையினகொல்லோ - ததர்வாய்ச் சிலம்பு கழிஇய செல்வம் பிறருழைக் கழிந்த என்.ஆயிழை அடியே?

- கயம்னா நற் 279 “என் மகளின் சிலம்பு கழி நோன்பு எள் மனையில் யான் கண்டுகளிக்க நடவாமல் பிறர்மன்ையில் பிறர் கண்டு களிக்க அது நடக்கவேண்டியதாயிற்று. ஆனால் அவளது மெல்லடி கள் காட்டுவழி நடந்தபோது எவ்வாறு துன்பப்பட்டனவோ! வேம்பின் ஒள்ளிய பழத்தை வெறுத்துத் தேன் போன்ற பால் வற்றிய இனிய இருப்பைப் பழத்தை விரும்பிப் பணி பெய்யும் காலை நேரத்தில் வெளவால் கிளைகள்தோறும் செல்லும் அவற்றின் மேல் நெய் தோய்ந்த திரிச்சுடர் விழுதல் போலத் தண்ணிய பணித்துளிகள் விழும் அக் காலை வேளை யில் காட்டினுள் சென்று எப்படி வருந்தினளோ? வாள் போன்ற நிறமுள்ள வரியுடைய ஆண் புலியோடு போரிட்ட ஆண் யானையின் புண்ணுடைய கால் விளங்கித் தெரிவது