பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

செங்கருங்காலி மலர் ஆகிய மூன்று மலர்களையும் கொய்து ஒன்றாகச் சேர்த்து ஒரு செப்பின் உள்ளே அடைத்து வைத்திருந்து பின்பு அப் பூக்களடங்கிய அச் செப்பைத் திறந்து வைத்தது போன்ற நறுமணம் ஒருங்கே அமையப் பெற்றது கூந்தல் அக் கூந்தலில் துயின்று மெல்ல முயங்கும் அருமையாகப் பெறும் பெரிய பயனைப் பெறாது பிரிந்து வாழ்கின்ற மரபுகளைக் கொண்டதாகப் பொருள் முறை களைப் படைத்தனர் அந்தச் சிறந்த நம் முன்னோர்கள் உல்கியல் முறைகளை வகுத்தபோது பொருள் தேடும் முறை களில் பிரியாது வாழும் முறை ஒன்றை வகுத்தமைக்க மறந்தனர் போலும்” என்றாள் தோழி தலைவனிடம்.

287. காட்டினேன் கண்களால்

'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு மதில் என மதித்து வெண் தேர் ஏறி, என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின் சேரி சேரா வருவோர்க்கு, என்றும் o அருளல் வேண்டும், அன்பு உடையோய் எனக், கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்: யானே - எல்வளை - யாத்த கானல் வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த 'என் எனப் படுமோ? என்றலும் உண்டே

- மோசிகீரனார் நற் 342 அன்புடையோய், மா என மதித்து மடல் ஊர்ந்தும் ஆங்கு மதில் என மதித்துப் பேய்த் தேர் ஏறியும் மயங்கிய தலைவற்கு, என் வாயினால் உன் மொழியைச் சென்று கூற மாட்டேன் உன்னிடம் சேரிக்குச் சேர வருபவர்க்கு என்றும் அருள் செய்தல் வேண்டும்” என்று யான் கண்ணினால் இனியதாகக் காட்டியும் அவள் தெளியவில்லை ஒளி பொருந்திய வளையல்களை உடையவளே, இனி, வேலி கட்டிய கானலில் வண்டுகள் தேனை உண்னும் நறிய மலர்கள் உதிர்ந்து நுண்ணிதாகக் கோலம் செய்த இடத்தில் என் தலையை அவள் சேவடியில் யான் சேர்த்தால், அத் தலைவர் செயல் இப்போது எப்படியுள்ளது என்று அனுள்