பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 * அன்பொடு புணாநத ஐந்திணை - பாலை

வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த மாஅல் போல, புன் தலை மடப் பிடி உணிஇயர், அம் குழை நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் படி Dமிறு கடியும் களிறே - தோழி! - சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து கெழு, நெடு வரை, இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் தாம் பாராட்டிய காலையும் உள்ளார், வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

- மதுரை மருதன் இளநாகன் அக 59 "தோழியே, கேள், நீ இப்போது குளத்தில் செறிந்த வண்டுகள் வந்து மொய்க்கும் இரட்டையாய் உள்ள தாமரை மலர் போன்று விளங்கும் அழகை இழந்து பசலையுடைய கண்களை உடையவளாய் உள்ளாய் பிரிவாற்றாது பெரிதும் வருந்துகின்றாய் நீ இவ்வாறு வருந்துவது உன் பெருந் தன்மைக்குப் பொருத்தமற்றது! நீ வாழ்க!

சூரபன்மனையும் அவனுடைய உறவினரையும் அழித்த ஒளி பொருந்திய இலை போன்ற நீண்ட வேலை உடைய சினம் மிக்க முருனின் குளிர்ந்த திருப்பரங்குன்றம் அது நல்லந்துவனரால் பாடப்பட்டது சந்தன மரங்கள் மிக்கு உயர்ந்த அம் மலையில் உள்ள இனிய சுனையிலே பொருந்திய நறுமணப் பூவுடன் இயன்ற அலங்கரித்தலால் அழகுடன் விளங்கும் கொண்டை அசை தலையுடைய நின் முதுகை நம் தலைவர் பாராட்டினார் அக் காலத்தையும் எண்ணிப் பாராமல் பருத்த இறையினையுடைய மூங்கில் போன்ற தோள் மெலியும்படி தொலைவான நாட்டில் செய்யும் பொருள் ஈட்டலை நினைத்து நம்மைப் பிரிந்து போனவரின் வழியில், வடக்குத் திக்கில் உள்ள நீர்வளம் பொருந்திய