பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 233

முதுநீர் முன்துறை முசிறி முற்றிக் களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, பானாட் கங்குலும் பகலும் ஆனாது அழுவோள் - ஆய் சிறு நுதலே?

- நக்கீரர் அக 57 “நெஞ்சே, சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த காலையும் உடைய பெண் வெளவால் பரந்த தன்மையுடைய வானத்தில் தாவிப் பறக்கும் தொழிலால் மிகத் தொலைவைக் கடந்து போய், வெயில் விளங்கும் நண்பகற் காலத்திலேயே ஆராய்ந்து பார்த்தும் தனக்கு உணவான இரை கிடைக்காமை யால் தான் முன்பு கனிகளைப் பெறும் நாளின் வளத்தை நினைத்துத் துன்பம் அடைந்து, முன்பு போல் மரங்களில் புகுவதற்கு ஏங்கியிருக்கும் பொலிவற்ற கிளைகளையும் குறிய அடியையும் உடைய இற்றி மரத்தின் நீண்ட விழுதானது பெரிய பொருக்கையுடைய உருண்டைக் கல்லைத் தீண்டிக் காற்று வீசுவதால், பெரிய கையையுடய யானை, கையை உயர்த்தினாற் போல் விளங்கும் அடர்ந்த பிடரி மயிரைப் பெற்ற குதிரைகளை உடைய கொடி கட்டப்பட்ட தேரினன் பாண்டியன் அவன் சிறந்த துறை முகத்தைக் கொண்ட 'முசிறி’ என்னும் பட்டினத்தை, யானைப் படையை அழித்த 'கல்’ என்ற ஆரவாரத்தையுடைய போரில், விழுப்புண் மறவரைப் போல் மிகவும் மனம் வருந்தி நள்ளிரவிலும் பகலிலும் ஓயாமல் அழுது கொண்டிருக்கிறாள் தலைவி அவளது அழகிய சிறிய நெற்றி குளிர்ந்த நிலவொளி பரவிய் பல கதிர்களை உடைய திங்களைப் போன்ற பெரிய சிறந்த ஆராயும் அழகு நீங்கச் சிறிய பீர்க்கினது மலரை ஒத்த நிறத்தைக் கொண்டதோ' என்று பொருள் வயின் பிரிந்த தலைமகன், தலைவியை நினைந்து கூறினான்

326. தலைவர் விரைவில் வருவார்

தண்கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் வருந்தினை, வாழியர், நீயே - வடாஅது