பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

நீத்தவர் இவ் உலகில் தவம் செய்தவரே ஆவார் என்ற இம் மேற்கோளுடன், தம் முயற்சியில் தலைப்பட்டவர், நம்மைப் பிரிந்து தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்றவர் நம் பெருமான், அவர் சென்ற நாள்களைக் கணக்கிடுதற்குக் கோடிட்ட நீண்ட சுவரில் அவற்றை எண்ணி எண்ணித் துன்பத்துள் ஆழ்ந்திடாதே

‘மின்னியபோதே காலம் தாழ்க்காமல் இடிபோல் ஆரவாரித்து எழுகின்ற மன வெழுச்சியுடன், புதியகாலும் சிறந்தவரியும் கொண்ட வலிய வில்லில் நாணினை ஏற்றிப் பகைவரின் அரிய மார்பில் செலுத்தும் அம்பை உடைய இளைஞர் பலர் அவருடன், தலைமையுடைய யானைகளின் வெண்மையான கொம்புகளைக் கவர்ந்து கொண்டவன், அக் கொம்புடன் கள்ளை விற்றுக் கொண்ட நெல்லால் நாட் காலத்தே களியாட்டம் அய்ர்கின்றவன், கழலை அணிந்த திருந்திய அடியையுடைய கள்வர் பெருமான்! மழவரின் நிலத்தை வணங்கச் செய்தவன் மிகுந்த வள்ளன்மையை யுடையவன் ஆகிய "புல்லி' என்பவனின், விழாக்கள் மிக்க சிறப்புடைய வேங்கட மலையைப் பெறுவதானாலும், பழைமை வாய்ந்த முழவு போன்ற வலிய தோளையுடைய பெரிய வேள் ஆன ஆவியின், பொன் மிக்க பெரிய நகரான பொதினியைப் போன்ற நின் ஒளி விளங்கும் அழகிய முலை யால் சிறந்த நுட்பமான, பூணை அணிந்த மார்பில் புணரும் புணர்ச்சியை மறந்து அங்குக் காலம் தாழ்த்திருந்து பழகார் வினை முற்றியதுமே விரைந்து வருகுவர் ஆதலால் ஆற்றி யிருப்பாயாக!” என்று தலைவன் பொருள் வயின் பிரிய வேறுபட்ட தலைவிக்குத் தோழி கூறினாள்.

328. தண்ணுமை ஒலிகேட்டுப் பொறுப்பாளோ?

கேளாய் வாழியோ! மகளை நின் தோழி திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் - கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப