பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 .ே அனபொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அவர் பொருட்டு, பெரிய மூங்கிலை உடைய சிறு காட்டில் ஆராய்ந்து பார்த்து அறுத்துக் கொண்ட சிறிய கணுக்களையுடைய நுண்மையான தலைக்கோலையுடைய கூத்தியருடன், பாணர்களைப் புரக்கும் அன்பையும் கழலும் தொடியையும் கள்ளுண்டு களித்திருக்கும் அத்தாணி மண்ட பத்தையும் உடைய நன்னன் வேண்மான்’ என்ற அரசனின் வயலைக் கொடி படர்ந்த வேலிகளையுடைய வியலூரைப் போன்ற நின் பரந்த முலையையுடைய மார்பு தனித்து வருந்தப் பலவற்றையும் நினைத்துத் துன்பத்தில் சூழாதே என்று கூறி வற்புறுத்துகின்றாய் இஃது என்ன?

குரவ மலர் மலர்ந்து முன் பனிக்காலம் நீங்கப் பெற்ற அரிய செவ்வியையுடைய இளவேனிற் காலம் அக் காலத்தில், அற்று அற்று விளங்கும் நீரினூடே விளங்கும் மணலை யுடைய அகன்ற ஆற்றின் கரையில் உள்ள துறையை அழகு செய்யும் மருத மரங்கள் அவற்றுடன் தொகுதியாக உயர்ந்து அழகு விளங்கும் தளிர் பொருந்திய கிளைகளையுடைய மா மரத்தின் கொத்துகளாய்ப் பொருந்திய புதிய மலர்கள் செறிந்த சோலைகளில், புகையைப் போன்ற வெண்மையான முகில்கள் தவழ, அச் சோலையில் மாந்தளிரைத் தின்னும் குயில்களின் குரலைக் கேட்கும் துணைவரைப் பிரிந்த மகளிர்க்குக் கண்ணின் நீரை நிறுத்துவது எளிதாகுமோ? அந்தத் துன்பத்தின் தன்மையை நீ அறிந்திலை போலும்” என்று தோழிக்குத் தலைவி சொன்னாள்

346. இளையாய், காண்க!

வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை அதிரல் பரந்த அம் தண் பாதிரி ~, உதிர்வி அம்சினை தாஅய், எதிர்வீ மராஅமலரொடு விராஅய், பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின்