பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

53. காதலர் திரும்பி வந்தார்

எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச் சுடர்ப் பூண் விளங்கும் ஏந்துஎழில் அகலம் நீ இனிது முயங்க, வந்தனர் - மள் இருஞ் சோலைமலை இறந்தோரே. - ஐங் 353 “நெருப்புக்கொடி சூழ்ந்த சிவந்த மலையைப் போல ஒளிவிடும் அணி கிடந்து விளங்கும் உயர்ந்த அழகிய தன் மார்பை இனிதாக முயங்குதற் பொருட்டாகப் பெரிய சோலைகளை உடைய மலைகளைக் கடந்து சென்ற நம் காதலர் திரும்பிவந்திருக்கின்றார்' என்று தலைவியை நோக்கித் தோழி சொன்னாள்.

54. நின் குணங்கள் நனைநது வரைந்தார் ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன் வந்தனரே - தெரியிழை அரிவை நின் பண்பு தரவிரைந்தே - ஐங் 354 தோழி தலைவியை நோக்கி, "நும் காதலர் குளிர்ந்த பெண் நாயைக் கூடிய செந்நாயின் ஆண், கன்றையுடைய பெண் மானைக் கொள்ளாமல் நீங்கும் அரிய காட்டைக் கடந்து, ஆராய்ந்து எடுத்த அணிகளை அணிந்த நின் அருங் குன்னங்கள் நினைவில் நினைவிட்டதால் விரைவாகத் திரும்பிவந்தார்" என்று கூறினார்.

55. சொல்லாமல் மீண்டு வந்தேன்!

திருந்திழை அரிவை நின் நலம் உள்ளி, அருஞ் செயல் பொருட் பிணி பெருந் திரு உறுகஎனச் சொல்லாது பெயர்தந்தேனே - பல் பொறிச் சிறு கண் யானை திரிதரும் நெறி விலங்கு அதர கானத்தானே. - ஐங் 355 "திருத்தமான அணிகளை அணிந்த மங்கையே! பல பொறிகளையும் சிறிய கண்களையும் உடைய யானை உலவும் நெறியில் குறுக்கிடும் சிறு வழிகளையுடைய காட்டில், யான்