பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 33

திண்ணிய தேரைச் செலுத்தி யான் நின்னையே தினைந்து வருதலால் எளியவாய் ஆயின” என்று தலைவியிடம்

கூறினான்

நேரிடைப்_பேச்சு 61. தோளின் சினம்!

உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை வேனிற் பாதிரி விரி மலர்க் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே! கண்ணினும் கதவ நின் முலையே! முலையினும் கதவ நின் தட மென் தோளே - ஐங் 361 தலைவன், “உயர்ந்த கரைகளைப் பொருந்திய கான் யாற்றில் விளங்கும் மணல் பரவிய அகன்ற துறையில் வேனில் பருவத்தில் மலரும் பாதிரியின் விரிந்த மலர்களைக் குவித்து மாஒல் தொடுக்கும் மடப்பம் பொருந்திய பெண்ணே, நின் கண்ணினும் கொங்கைகள் சினம் கொண்டனவாயும் அவற்றி னும் தின் பெரிய மென்மையான தோள்கள் மிகச் சினம் கொண்டனவாயும் உள்ளன" என்று தலைவியிடம் கூறினான்.

62. எப்படி வந்தாய்?

பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை, சிறு கண் யானை உறு பகை நினையாது, யாங்கு வந்தனையோ - பூந்தார் மார்பl அருள் புரி நெஞ்சம் உய்த்தர இருள் பொர நின்றஇரவினானே? - ஜங் 362 “தலைவா! மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த மார்பை உடையவனே கற்குவியலையுடைய செல்வ தற்கு அரிய கவர்த்த வழியில் உலவும் சிறிய கண்ணை யுடைய யானை மிக்க பகைக்கு அஞ்சாது, எமக்கு அருள் செய்யும் வண்ணம், நின் நெஞ்சு நின்னைச் செலுத்த, இருள் அடர்ந்து வழிச் செல்வாரைத் தடுக்கும் இரவில் எங்ங்னம் வந்தாய்? என் உள்ளம் வருந்துகின்றது” என்று தோழி தலைவனை நோக்கி உரைத்தாள்