பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

63. சுணங்கு இல்லை அணங்கு!

சிலை விற் பகழிச் செந் துவர் ஆடைக் கொலை வில் எயினர் தங்கை நின் முலைய கணங்கு என நினைதி நீயே; அணங்கு என நினையும்,என் அணங்குறு நெஞ்சே.

- ஜங் 363 தலைவன் தலைவியை நோக்கி, “சிலை என்ற மரத்தால் செய்த வில்லில் எய்யும் அம்பையும் செந்நிற ஆடையையும், கொலைத் தொழிற்குரிய வில்லையும் கொண்ட வேட்டுவர் தம் தங்கையே, நின் கொங்கையில் உள்ள தேமலை நீ சுணங்கு என நினைக்கின்றாய். நோய் மிக்க என் மனம் அதை வருத்தம் தரும் அணங்கு என எண்ணுகின்றது" என்று திரும்பியவன் சொன்னான்

64. தலைவியிடம் கேட்டு வருவேன்

முளவு மா வல்சி எயினர் தங்கை

இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச்

சொல்லினென் இரக்கும் அளவை -

வென் வேல் விடலை! - விரையாது ஈமே. - ஜங் 364

தோழி, “வெண்மையான வேலையுடைய தலைவ, முள் பொருந்திய விலங்கான பன்றியை உணவாகக் கொண்ட வேட்டுவர்க்குத் தங்கையான இளமையும் அழகும் உடைய காட்டுவப் பெண்ணுக்கு நின் உடன்போக்குக் குறிப்பை உரைத்து உடன்படுமாறு இரந்து கொண்டு யான் வரும் வரை விரையாமல் நிற்பாய்' என்று தலைவனைப் பார்த்துச் சொன்னாள்

65. தவம் என்ன செய்தாய்?

கண மா தொலைச்சித் தன் ஐயர் தந்த நிண ஊன் வல்சிப் படு புள் ஒப்பும் நல மாண் எயிற்றி போலப் பல மிகு நன்னல நயவரவு உடையை என் நோற்றனையோ? - மாவின் தளிரே - ஜங் 365