பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அணிந்து, பலவாய் விரவிய பூக்களால் பொலிந்த வேனிற் பருத்தில், கான் ஆற்றின் மருங்கே தேர் ஏறிக் குறுக வந்த வனுடைய பெயருடன் இவளது உயிர் ஒன்றுபடலாயிற்று” என்று கூறினாள்

68. இளவேனில் இன்ப நுகர்ச்சி எரிப் பூ இலவத்து ஊழ்கழி பல் மலர் பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும் தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ, பெரும! - நின் அம் மெல்லோதி அழிவிலள் எனினே. - ஜங் 368 தோழி தலைவனுக்கு, “பெருமையுடைவனே, தயைப் போன்ற நிறம் உடைய இலவ மரத்தினின்றும் உதிர்ந்த பல மலர்கள் பொரி போன்ற மலர்களைக் கொண்ட புன்க மரத்தின் புள்ளி பொருந்திய நிழலில் கிடந்து அழகுபடுத்தும் குளிர்ந்த வேனிற்காலத்து விளையாட்டில் பெறும் இன்ப துகர்ச்சி, அழகும் மென்மையும் உடைய கூந்தலையுடைய இவள் தின் பிரிவாற்றி மேனி நலன் அழிவில்லாது இருப்பா ளாயின் எம்மொடு கொள்க’ என்று வேனிற் பருவத்தைக் கூறினாள்

69. குயில் கூவுதலைவிட அலர் பெரிதாயிற்று! வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல் குறிநீ செய்தனை என்ப; அலரே, குரவ நீள் சினை உறையும் பருவ மாக் குயில் கெளவையின், பெரிதே' - ஐங் 369 தலைவி தலைவனை நோக்கி, "வளமான மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் படியும் நறுமணச் சோலையில் முளைபோல் வரிசைப்பட அமைந்த பற்களையுடைய ஒருத்தி யொடு நீ குறி செய்து ஒழுகினை என்று சொல்வர் அதன் வழி எழுந்த அலர் குரவ மரத்தின் நீண்ட கிளையில் வதியும வேனிற பருவத்துக் கூவும் இயல்புடைய குயிலின் குரல் ஒசையை விடப் பெரிதாயிற்று” என்றாள்