பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 3: 37

70. நின்னால் விரும்பப்பட்டவள் யார்?

வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை

இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப,

நீ நயந்து உறையப்பட்டோள்

யாவளோ? எம் மறையா தீமே. - ஐங் 370

தலைவி தலைவனை நோக்கி, "வளமான கிளைகளை யுடைய கோங்கின் குளிர்ந்ததாய் மணம் கமழும் மாலையைக் கருமையுடைய சிறகுகள் பொருந்திய வண்டுகளின் கூட்டம் மொய்த்து நிற்ப, நின்னால் அணிந்து விரும்பப்பட்டவள் யார் என்பதை மறைக்காது எனக்குக் கூறுவாயாக!” என்றாள்

toseň Goa šestuu saab stødisci

71. காட்டுவழி இனியதாகுக! மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச் கரம் நனி இனிய வாகுகதில்ல - அறநெறி இது எனத் தெளிந்த என் பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! - ஜங் 371 நற்றாய், "மறவர் செய்யும் முழக்கத்துக்கு ஏற்ப மயில் ஆடும் நெடிதாய் உயர்ந்த குன்றத்தில் ஒலிக்கும் கொண்டல் மழை பெய்தலால் அதனைச் சார்ந்த வழி வெம்மை இல்லாது இனிமையுடையதாகுக தலைவனுடன் போதலாகிய இஃது அறநெறியே என்று தெளிந்து சென்ற, பிறைபோல் நெற்றியை யுடைய என் இளமகள் சென்ற பாலைவனம் ஆதலால்' என்று சொன்னாள்.

72. பெற்றவளை நினைத்தாளா? என்னும் உள்ளினள்கொல்லோ - தன்னை நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு, அழுங்கல் மூதூர் அலர் எழச் செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? - ஐங் 372 நற்றாய், “தன் நெஞ்சு கொள்ளும்படியாய் வேண்டிய வற்றைக் கூறித் தலைவிக்குத் தெளிவை உண்டாக்கினான்