பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : A5

சிறு வரை இறப்பின் காண்குவை - செறிதொடிப் பொன் ஏர் மேனி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே. - ஐங் 388 “செறிந்த தொடியையும் பொன் போன்ற அழகிய மேனியையும் உடைய மங்கையுடன் வென்றி தரும் வேலேத்திய விடலை நினைத்துச் சென்ற வழியைத் தீயைப் போன்று விளங்கும் ஞாயிற்றின் வெம்மை தணியும் அளவும் கரிய அடியையுடைய யா என்னும் மரத்தின் செறிவற்ற நிழலில் தங்கிச் சிறு மலைகளைக் கடந்து சென்றால் காணலாம்” என்று செவிலுக்கு வழியில் காதலரைக் கண்டவர் கூறினர்.

89. வெம்மை நிலத்தில் படிந்தனவோ கால் 'செய்வினைப் பொலிந்த செறி கழல் நோன் தாள் மை அனற் காளையொடு பைய இயலி, பாவை அன்ன என் ஆய்தொடி மடந்தை சென்றனள்! என்றிர், ஐய, ஒன்றினவோ அவள் அம் சிலம்படியே! - ஜங் 389 "ஐயனே! என் கண் பாவை போல் ஆய்ந்து கொண்ட தொடியினைப் பூண்ட என் மகள், தொழில் வகையால் அழகுறச் செய்யப்பட்ட செறிந்த கழலினையும் வலிய தாளை யும் கரிய தாடியையும் உடைய காளை போன்றவனுடன் மெல்ல நடந்து போனாள் என்று சொல்கின்றீர் அது போது அவளுடைய அழகிய சிலம்பை அணிந்த அடிகள் நிலத்தில் பொருந்தினவா?” என்று கண்டவர்களைச் செவிலித்தாய் வினவினாள். - {

90. காளையுடன் மகளைக் கண்டோம் நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது பல் ஊழ் மறுகி வினவுவோயே! திண் தோள் வல்வில் காளையொடு கண்டெனம்மன்ற சுரத்திடை, யாமே. - ஐங் 390 கண்டவர், "அறிவுரைத் தேடித் திரிந்து அவரிடம் கையால் தொழுது பல முறையும் வினவுதலை உடையவளே, திண்ணிய தோள்களையும் வன்மையான வில்லையுடைய