பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 65

யும் பெற்ற தலைவி இருக்கின்ற ஊர் நெடுந்துாரத்தில், அடை தற்குரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சானது ஈரம் பொருந்திய செவ்வியை உடைய பசுமையான புனத்தை யுடைய ஒற்றை ஏரை உடைய உழவனைப் போல பெருவிரை யும் வினை உடையது அதனால் யான் வருந்துகிறேன்.” என்றுரைத் தாள் தலைவன்.

130. தலைவர் பிரிந்து செல்லார்! 'வினையே ஆடவர்க்கு உயிரே, வாள் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என, நமக்கு உரைத்தோரும் தாமே, அழாஅல் - தோழி, - அழுங்குவர் செலவே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 135 "தோழியே தொழில் தான் ஆண்மக்களுக்கு உயிராகும் இல்லின்கன் உறையும் மகளிருக்குக் கணவன்மாரே உயிராவர். என்று நமக்கு எடுத்துக் கூறியவரும் அத் தலைவரே. ஆதலால் அழுதலை ஒழிவாயாக. தலைவர் செல்லுதலைத் தவிர்ப்பார்” என்று தலைவன் பிரிந்து செல்வதைக் கூறிய தலைவிக்குத் தோழி ஆற்றுவித்தாள்.

131. ஏற்போர் இல்லாத நாள்கள் ஆகுக மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப, நிற் துறந்து அமைகுவென் ஆயின் - எற் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக! - யான் செலவுறு தகவே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 137 “மென்மைத் தன்மையை உடைய பெண்ணே நின் நல்ல நெஞ்சம் தனிமையில் வருந்தும்படி, உனைனைப் பிரிந்து சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின், நான் ங்ங்னம் செல்லுவதற்கு உற்ற வினையிடத்தில், என்னிடத்து ரப்போர் வராத நாள்கள் பலவாகுக!

132. ஊர் அறிந்தது துன்பம்

வேதின வெளிநின் ஒதி முது போத்து, ஆறு செல் மாக்கள் புள்கொளப், பொருந்தும்