பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

மறப்பு அருங் காதலி ஒழிய இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.

- துரங்கலோரி குறு 151 நெஞ்சமே! ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமை யால் சிவந்த கால்களையுடைய பெண் பறவை வல்லுறு என்னும் பறவை (தன் மேல் வீழ) இரையாகக் கொள்ளும் பொருட்டுத் தம்முடைய கணவனாகிய ஆண் பறவையைக் காணாமல் வேய்ங்குழலினது இசையைப் போன்ற குரல் களைக் கொண்டனவாய் சிறிய பல ஒலிகளால் அலைத்துக் கொண்டிருக்கும் குன்றுகள் பொருந்திய சிறிய வழிகள் கடத்திற்கு அரியன என்று எண்ணாமல் மறத்தற்கு அரிய நம் தலைவி இவ் இடத்தில் தனித்திருக்க நான் செல்வேன் என்று துணிவது ஈங்கு நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்” என்று வருந்தினான் தலைவன்

137. எவ்விதம் பெற்றாரோ? யாங்கு அறிந்தனர்கொல் - தோழி - பாம்பின் உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளிப், பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் தயங்க இருந்து, புலம்பக் கூஉம் அருஞ் சுர வைப்பின் கானம் பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?

- - மதுரைச் சித்தலைச் சாத்தன் குறு 154 "தோழியே! பாம்பினது சட்டை உரிந்த தோல் மேல் எழுந்தாற் போல வெம்மை விளங்குகின்ற கானலின் நண்பகற் பொழுதிலே இரையை விரும்பி மேலெழுந்து பறந்து சென்ற ஆண் பறவையை நினைத்து, புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், மென் நடை பெற்ற பெண் புறா பொரிந்த அடியினையும் வெடித்த காயையும் கொண்ட கள்ளியினது அழகிய கிளையில் இருந்து தனிமைத் துயர் தோன்றும்படி கூவுகின்றது அத்தகைய கடத்தற்கரிய பாலை