பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 67

நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல, இன் துயில் எடுப்புதி - கனவே! - எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.

- கோப்பெருஞ்சோழன் குறு 147 “கனவே! வேனிற்காலத்து மலரும் வளைந்த மலரின் துய்யைப் போன்ற மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும், துண்ணிய தொழிலை உடைய அணி கலனையும் அணிந்த தலைவியை நேரே கொண்டுவந்து தந்தது போல, நீயும் இனிய துயிலினின்றும் என்னை எழுப்பு கின்றாய். அதனால் தம் துணைவியரைப் பிரிந்தோர் இனி உன்னை இகழார்' என்று கனவு கண்டு தலைவி உரைத்தாள்

135. அவனோடு சென்றால் நாணம் போகும்!

அளிதோ தானே - நாணே நம்மொடு நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை தீம் புனல் நெரிதர வீய்ந்து உக்காஅங்குத், தாங்கும் அளவைத் தாங்கி, காமம் நெரிதரக் கைந் நில்லாதே.

- வெள்ளிவீதியார் குறு 149 "தோழி, நாணம் நம்மோடு மிக நெடுங்காலம் உடனி ருந்து வருந்தியது வெள்ளிய பூவை உடைய கரும்பின், உயர்ந்த மணலைப் பெற்ற சிறிய கரையானது, இனிய நீர் நெருங்கி மோதுவதால் கரை அழிந்து உட்குறைந்தாற் போல், தாங்கும் அளவில் தாங்கிய காமம் மேன்மேலும் நெருங்குவ தால் என்னிடம் தங்கி நில்லாமல் போய்விடும். அஃது இரங்கத் தக்கது" என்று தலைவி தோழியை நோக்கிக் கூறினாள்

136. இளமைக்கு முடிவாகும்! வங்காக் கடந்த செங் காற் பேடை எழால் உற வீழ்ந்தெனக் கணவற் காணாது, குழல் இசைக் குரல் குறும் பல அகவும் குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,