பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 71

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி

விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்பக்,

கால் இயல் செலவின், மாலை எய்திச்,

சில் நிரை வால் வளைக் குறுமகள்

பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.

- மதுரை ஈழத்துப் பூதன் தேவன் குறு 189

“பாகனே, இன்றே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை மீண்டும் வருவோமாக, குன்றிலிருந்து வீழும் அருவியைப் போல யானைத் தந்தத்தால் செய்த வெள்ளிய தேரானது விரைந்து செல்க. இளம்பிறையைப் போன்ற விளங்குகின்ற ஒளியையுடைய அத் தேரினது ஆழி வானத் தினின்றும் வீழ்கின்ற கொள்ளியைப் போலப் பசிய பயிர் களைத் துமிக்கட்டும். காற்றைப் போன்ற மிகுந்த விரைவை உடைய தேரானது மாலைக் காலத்தில் தலைவியின் இருப்பிடத்தை அடைக சிலவாகிய வரியை உடைய வெள்ளிய வளைகளைக் கொண்ட அவள்து மாட்சிமைப் பட்ட மேனியை யாம் பலமாக அணைந்து மகிழ்வோம்” என்றான் தலைவன்

142. வருந்தாது இருப்பேனா? 'ஈங்கே வருவர், இனையல், அவர் என, அழாஅற்கோ இனியே?'நோய் நொந்து உறைவி மின்னின் தூவி இருங் குயில், பொன்னின் உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை நறுந் தாது கொழுதும் பொழுதும், வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.

- கச்சிப்பேட்டு நன்னாகையார் குறு 192 "நோயால் வருந்தி உறையும் தோழி, தலைவர் இவ் இடத்தே மீண்டும் வருவார் என்று நீ சொல்வதனால், இப் பொழுது நான் அழாமல் இருப்பேனா? மின்னுகின்ற இனிய இறகுகளை உடைய கரிய குயில் தன்மேனி பொன்னை உரைத்த பொடியானது விளங்குகின்ற உரைகல்லை ஒக்கும் படி மா மரத்தின் கிளையினிடத்து நறிய பூந்தாதைக் கோது கின்ற இளவேனிற்காலத்திலும் அவர் வாராமையால்