பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 77

துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. - மோதாசனார் குறு 229 “இவன் இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் அவனது புல்லிய தலைமயிரை வளைத்து இழுப்பாளாய் ஒடவும், இவர் தம் மோதலை அன்புடைய செவிலித் தாயார் இடைமறித்துத் தடுக்கவும் ஒழியாமல் அயன்மை உடைய சிறு பூசல் புரிவார்களாக முன்பிரிந்தனர். இணையாகப் பொருந்தக் கட்டிய மலர்மாலையைப் போல இவர்கள் ஒருமை உள்ளவராய் மனம் கூடி மகிழும் இயல்பை இப் பொழுது உண்டாக்கினாய். ஊழே உறுதியாக நீ நன்மையை உடையாய் ஆவாய், என்று தலைவனும் தலைவியும் உடன் போதலைக் கண்டோர் கூறினார். '

152. நினையாமல் இல்லை அவர் உள்ளார் கொல்லோ? - தோழி, - உள்ளியும், வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ மாற்புகா அருந்திய மா எருத்து இரலை, உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வளி நிழல் துஞ்சும் மா இருஞ் சோலை மலை இறந்தோரே.

- ஊண்பித்தை குறு 232 "தோழியே மரலாகிய உணவை உண்ட பெரிய பிடரை உடைய ஆண்மான், உரலைப் போன்ற காலுடைய யானை முறித்து உண்டு, குறைபடச் செய்த யா மரத்தின் புள்ளி களை உடைய நிழலின் கண் உறங்குகின்ற மிகப் பெரிய இருண்ட சோலைகளை உடைய மலைகளைக் கடந்து பிரிந்து சென்ற தலைவர், நம்மை நினையாதிருப்பாரோ? அன்றி நம்மை நினைத்தும் வினைமுற்றி மீள்வதற்கு வாய்ந்த வாய்ப்பினை உணராமையினால் வாரார் ஆயினரோ?" என்றாள் தலைவியை நோக்கித் தோழி.

153. தலைவியின் ஊர்!

ஒம்புமதி, வாழியோ - வாடை பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் தூவெள் அருவிக்