பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; கொண்டு செல் - பாண நின் தண் துறை ஊரனை, பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் புரவியும் பூண் நிலை முனிகுவ; விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

- கூடலூர்ப் பல்கண்ணனார் நற் 380 “பாணனே, நெய்யும் தாளிப்புப் புகையும் படிந்து உடம் பொடு உடையும் அழுக்காயின. தேமல் படர்ந்த மெல்லிய கொங்கையில் இனிய பால்சுரக்க அதனை ஊட்டுவதற்காக மகனைத் தழுவியதால் அவளுடைய தோளும் முடை நாற்றம் வீசும். ஆகையால் தூய அணிகலன் அணிந்த பரத்தையரின் தெருவில் அழகுறத் தோன்றும் தேரோன் தலைவனுக்கு யாம் பொருத்தம் உடையேம் அல்லேம். அதனால் பொன் போன்ற நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை எடுத்து இசை எழுப்புதலில் நீ வல்லவனே ஆனாலும் தொழாதே. உன் தண் துறை ஊரனை அழைத்துக் கொண்டு செல். சிறந்த எம் மனை நின்று நீ பாடாதே. நெடுநேரம் நிற்பது கூடாது. குதிரைகளும் தம்மைத் தேரில் பூட்டியிருத் தலை வெறுக்கும். யாம் விரும்பாதபோது நீ பயனில்லாத சொற்களைப் பேசாதே” என்று வாயிலாக வந்த பாணனிடம் வெறுப்புற்றுக் கூறினாள் தலைவி.

181. நலனை இழக்கும் தோள்கள்

வாளை வாளின் பிறழ, நாளும் பொய்கை நீர் நாய் வைகுதுயில் ஏற்கும் கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ, யாணர் ஊரன் காணுநன் ஆயின், வரையாமையோ அரிதே வரையின்;