பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

117


மணம் நிகழும் அவர் மனையில் ஒலிக்கும் கண்ணை யுடைய முழவின் இனிய ஓசை, தம்மை அழைப்பவை போல முழங்கிற்று. முன்பொருநாள் யாம் கழங்கு ஆடும் தோழியர் கூட்டத்தினின்று நீங்கி அவரை முதன் முதலாகக் கண்ட போது நம்மைத் தேற்றி அருள்செய்தற்காகக் கூறிய சூளுரை தான் தம் மனத்தே தோன்றிச் சுடுவதால் அவர் விரும்பிய மணத்தையும் மேற்கொள்ளாமல் கைவிட்டார் அல்லரோ”

190. தலைவனை முழுதும் வயப்படுத்துவேன்

மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென - இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின், ஆனாது, கழறுப என்ப, அவன் பெண்டிர், அந்தில் கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், கரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என அதிமந்தி பேதுற்று இணைய, சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் அம் தண் காவிரி போல, கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின், யானே.

- பரணர் அக 76 யாங்கள் ஒரிரவு மண்ணை உடைய தண்ணுமையுடன் காண்பவர்க்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் கூத்தாட்டத்தை நிகழ்த்தினோம். அந்த ஆட்ட்த்தைக் காணும் பொருட்டுக் குளிர்ந்த நீர்த்துறையை உடைய தலைவன் எம் சேரிக்கு நாங்கள் அழைக்காமலேயே வந்தான். அவ் அளவிலேயே அதை அறிந்து, அவனுடைய பெண்டிர், எம்மிடம் பொறாமை கொண்டு, இனிமையையும் கள்ளையும் உண்ட அஃதை என்பவனின் யானைகளையும் நல்ல அணிகளையும் பரி சிலர்க்கு வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாலோலக்க மண்டபத்தில் புகும் பொருந, நின் பறையைப் போன்று இடையறாது என்னை இகழ்வர் எனக் கூறுவர்.